சிஎஸ்கே அணியால் என்னை வாங்க முடியாது – அயர்லாந்து வீரர் பரபரப்பு பேட்டி!

0
28625
csk joshua little

2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம்  நாளை கொச்சியில் வைத்து நடைபெற இருக்கிறது. இதில் எந்தெந்த அணி யார், யாரை வாங்க போகிறார்கள்? என்று எதிர்பார்ப்பு  கிரிக்கெட் ரசிகர்களிடையே பரவி இருக்கின்றது. மொத்தம் 405   உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்கிறார்கள் .

இந்த ஏலத்திற்காக ஐபிஎல் இல் உள்ள பத்து அணிகளும் முழு வீச்சில் தயாராகி வருகின்றன . கடந்த ஆண்டு ஐ பி எல் போட்டியில்  படுதோல்வி அடைந்த சிஎஸ்கே அணி இந்த முறை புதிய அணியை கட்டமைத்து  கோப்பையை வெல்லும் உத்வேகத்துடன்  உள்ளதால் ஏலத்தில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

- Advertisement -

போலார்டு மற்றும் பிராவோ போன்ற ஐபிஎல் ஜாம்பவான்களும் இந்த வருட போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளதால் அவர்களது இடங்களை நிரப்ப போகும்  வீரர்கள் யார் என்ற  எதிர்பார்ப்பும்  ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அயர்லாந்து அணியின்  இடது கை பந்துவீச்சாளர் ஜோஸ்வா லிட்டில்  தன்னை  சிஎஸ்கே அணி  வாங்காது என்று அதிர்ச்சி பேட்டி அளித்துள்ளார் .

அயர்லாந்து அணியின் முன்னணி பந்துவீச்சாளரான  ஜோஸ்வா லிட்டில் கடந்த ஒரு வருடங்களாகவே சிறந்த ஃபார்மில் உள்ளார். இவர் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை போட்டியில்  நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு ஹாட்-ட்ரிக் உடன் 7 போட்டிகளில் 12 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். மேலும் இவர்  இலங்கை பிரீமியர் லீக் போட்டிகளில் தம்புல்லா வைகிங்  அணிக்காகவும் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ்  அணிக்காக தி 100  போட்டியிலும் ஆடியுள்ளார் .

கடந்த ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்கு  வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக தேர்வு செய்யப்பட்ட இவர்  இரண்டே வாரங்களில்  அணியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பேசியுள்ள லிட்டில்  “நான் ஒரு சர்வதேச பந்துவீச்சாளர் என்னை வலை பயிற்சிக்கு பந்து வீச்சாளராக  அழைத்து மற்ற பந்துவீச்சாளர்கள் ஓய்வு எடுக்கும் நேரத்தில்  என்னை பந்து வீச  அழைத்தார்கள்”. இது தவறான அணுகுமுறை  என்று கூறினார்.

- Advertisement -

மேலும் இது குறித்து  பேசிய  அவர்  “நான் ஒரு சர்வதேச பந்துவீச்சாளர் ஆனால் சென்னை அணி நிர்வாகம்  என்னை ஒரு  வலைப்பந்துவீச்சாளரைப் போல  நடத்திய விதம் எனக்கு பிடிக்கவில்லை. அதனால் சென்னை அணியில் இருந்து  பாதியிலேயே விலகி விட்டேன்”  என்று தெரிவித்தார் .

இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர்  “எனக்கும் சிஎஸ்கே அணி நிர்வாகத்துக்கும்  ஒரு நல்ல புரிந்துணர்வு இல்லை.  இதன் காரணமாக அவர்கள்  என்னை  ஏலத்தில் எடுப்பார்களா? என்று தெரியாது. மேலும்  நான் இந்த ஒரு வருடம்  சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி உள்ளதால்  மற்ற அணிகளும் என்னை எடுக்க  முயற்சி செய்யும்”  என்று கூறி முடித்தார் .