அயர்லாந்தைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளரை பயிற்சிக்கு அழைத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ்

0
1441
Josh Little

ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அனைத்து அணிகளும் தற்பொழுது முதலே தயார் நிலையில் உள்ளது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தங்களுடைய பயிற்சி ஆட்டத்தில் தொடங்கிவிட்டனர். மகேந்திர சிங் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள வீரர்கள் தற்போது பயிற்சி எடுத்துக் கொண்டு வருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் தொடரில் நெட் பந்து வீச்சாளரை தேர்ந்தெடுத்து அவரை பயிற்சி ஆட்டத்தில் பந்துவீச வைப்பார்கள். அவரது ஆட்டத்தை பொறுத்து அவருக்கான வாய்ப்பு பின்னால் கிடைக்கும். அணியில் உள்ள வீரருக்கு ஏதேனும் ஒரு காயம் ஏற்பட்டால் அப்போது அவருக்கு மாற்று வீரராக அந்த நெட் பவுலரை விளையாட வைப்பார்கள்.

அயர்லாந்தைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் லிட்டில்

நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அயர்லாந்து இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் லிட்டிலை பந்து வீச்சாளராக தேர்வு செய்துள்ளது. சமீபத்தில் அயர்லாந்து பந்துவீச்சாளர்கள் மத்தியில் இவர் மிக அற்புதமாக பந்து வீசி வருகிறார். 22 வயதே ஆகும் அவர் மிக அற்புதமான வேகத்தில் மிக அற்புதமாக பந்தை ஸ்விங் செய்து வருகிறார்.

31 டி20 போட்டிகளில் விளையாடிய 34 விக்கெட்டுகளை இதுவரை இவர் கைப்பற்றி இருக்கிறார். இவரது பந்துவீச்சு எக்கனாமி 7.49 ஆகும். குறிப்பாக டெத் ஓவர்களில் இவர் மிக சிறப்பாக பந்துவீசி வருவதாக வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

மகேந்திர சிங் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இவர் தனது ஆட்டத்தை நிச்சயமாக மேம்படுத்திக் கொள்வார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. இவரது ஆட்டத்தை பொறுத்து பின்னாளில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் விபரங்கள் விளையாடும் வாய்ப்பை வழங்கும் என்றும் நாம் எதிர்பார்க்கலாம்.

ஜோஸ் லிட்டிலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அயர்லாந்து கிரிக்கெட் நிர்வாகம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நெட் பந்து வீச்சாளராக ஜோஸ் லிட்டில் விளையாட போவதை தெரிந்த அயர்லாந்து கிரிக்கெட் நிர்வாகம் ட்விட்டர் வலைதளத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. “நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஒரு வளர்ச்சி வாய்ப்பை நோக்கி முன்னேறும் ஜோஷ் லிட்டிலுக்கு எங்களுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.
உங்களுக்கு அங்கே நல்ல அனுபவம் கிடைக்க நாங்கள் மனதார எண்ணிக் கொள்கிறோம் என்றும் அயர்லாந்து கிரிக்கெட் நிர்வாகம் ஜோஸ் லிட்டிலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.