ஏலத்தில் அண்டர்-19 ஹீரோக்கள் இரண்டு பேரை எடுத்த சிஎஸ்கே; யார் இந்த இளம் சிங்கங்கள்?

0
1967

சிஎஸ்கே அணி, 2022 அண்டர்-19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கலக்கிய இரண்டு இளம் வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது.

சிஎஸ்கே அணி ஏலத்தில் பங்கேற்று முதலாவதாக 50 லட்சத்திற்கு ரகணியை எடுத்தது ராபின் உத்தப்பா வெளியேற்றப்பட்டதால் அவருக்கு மாற்று வீரராக இருப்பார் என்ற நோக்கில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

- Advertisement -

அடுத்ததாக சிஎஸ்கே அணிக்கு வெளிநாட்டு ஆல்ரவுண்டர் தேவையென இருந்தபோது ஷாம் கர்ரன் கிடைக்கவில்லை. அடுத்ததாக இருந்த பென் ஸ்டோக்சை 16.25 கோடிக்கு எடுத்து ரசிகர்களை குஷி படுத்தியது.

பேன் ஸ்டோக்ஸ் எடுத்தபிறகு, இரண்டு இளம் வீரர்களை சிஎஸ்கே அணி எடுத்தது ஆச்சர்யமாக இருந்தது. பொதுவாக இளம் வீரர்கள் பக்கமே சிஎஸ்கே அணி போகமாட்டார்கள் என்ற எண்ணம் நிலவுவதே இதற்கு காரணம். யார் அந்த இரண்டு இளம் வீரர்கள் என பார்ப்போம்.

முதலில் 20 லட்சத்திக்கு எடுக்கப்பட்டவர் ஷேக் ரஷீத். அண்டர்-19 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் 50 அடித்து கலக்கினார். முந்தைய சீசனில் சிஎஸ்கே-வுக்கு பத்ரிநாத் போல நிலைத்து நின்று ஆடக்கூடியவர், வேகம் மற்றும் சுழல் ஸ்பின் இரண்டையும் சிறப்பாக ஆடக்கூடியவர். கூடுதலாக, அதிரடியாகவும் ஆடக்கூடியவர் என்பதால் எடுத்துள்ளது.

- Advertisement -

அடுத்ததாக நிஷாந்த் சிந்து என்பவரை 60 லட்சத்திற்கு எடுத்துள்ளது. இன்னொரு அண்டர்-19 உலகக்கோப்பை ஹீரோவான இவர், இறுதிப்போட்டியில் முக்கியமான நேரத்தில் 50 அடித்தார். அணியின் வெற்றிக்கு முக்கியமான வீரராக இருந்தார். சுழல்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக இருப்பதால், எதிர்கால நோக்கில் இவரை எடுத்தது சிஎஸ்கே.

ஏற்கனவே, 2022 அண்டர்19 பிளேயர் ஹர்ஷவர்தன் அணியில் இருக்கிறார். தற்போது 2 புதிய இளம் வீரர்களை எடுத்துள்ளதால், சிஎஸ்கே அணி எதிர்காலத்தை நோக்கியும் நகர்கிறது என்றே கூறலாம்.