ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து சிஎஸ்கே ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகள் அடுத்தடுத்து நிறைய போட்டிகளில் விளையாட இருக்கின்றன. மேலும் இந்த அணிகள் புள்ளி பட்டியலில் கடைசி நான்கு இடங்களில் வருகின்றன. எனவே சிஎஸ்கே அணிக்கு அடுத்த ஒரு வாரத்தில் என்ன நடந்தால் பிளே ஆப் சுற்றிற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.
இன்று மும்பை ஹைதராபாத் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதிக் கொள்கின்றன. மீண்டும் மும்பை வான்கடே மைதானத்தில் வருகின்ற ஞாயிறு மும்பை சிஎஸ்கே அணிகள் மோதி கொள்கின்றன. இதைத்தொடர்ந்து 23ஆம் தேதி ஹைதராபாத் மைதானத்தில் மும்பை ஹைதராபாத் மீண்டும் மோதிக் கொள்கின்றனர். இதற்கு அடுத்து 25ஆம் தேதி சென்னையில் வைத்து சிஎஸ்கே மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதி கொள்கின்றன.
தற்போது அடுத்தடுத்த சில நாட்களில் மும்பை ஹைதராபாத் அணிகள் இரண்டு முறை மோதிக் கொள்கின்றன. மேலும் இந்த இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடுகின்றன. இந்த இரண்டு அணிகளும் மூன்று போட்டிகள் விளையாட இருக்கின்றன. இந்த போட்டிகளின் முடிவில் இந்த மூன்று அணிகளில் ஏதாவது ஒரு அணி பிளே ஆப் வாய்ப்பிலிருந்து வெளியேற பிரகாசமான வாய்ப்புகள் இருக்கிறது.
எனவே சிஎஸ்கே அணியை பொறுத்தவரையில் மும்பை ஹைதராபாத் அணிகள் மோதிக் கொள்ளும் இரண்டு போட்டிகளில் ஏதாவது ஒரு அணி முழுமையாக இரண்டு போட்டிகளையும் வென்றால் ஒரு அணி மிகவும் கீழே சென்று விடும். எனவே இந்த மோதலில் ஹைதராபாத் அல்லது மும்பை இரண்டு போட்டிகளிலும் வெல்ல வேண்டும்.
அதே சமயத்தில் சிஎஸ்கே அணி இந்த இரு அணிகளுடனும் மோதும் போட்டியில் இரண்டையும் வெல்ல வேண்டும். இப்படி நடக்கும் பொழுது சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருந்து ஆறு அல்லது ஏழாவது இடத்திற்கு முன்னேறி வருவதற்கு நல்ல வாய்ப்புகள் இருக்கிறது. எனவே இந்த இரண்டு சம்பவங்களும் நடப்பது சிஎஸ்கே அணிக்கு இன்றியமையாதது.
இதையும் படிங்க : சூப்பர் ஓவர்.. டிராவிட் செய்த மெகா தவறு.. டெல்லிக்கு 10வது பாயிண்ட்.. ரசிகர்கள் விமர்சனம்
தற்போது இதில் ஒரு சிக்கல் என்னவென்றால், புள்ளி பட்டியலில் கடைசி நான்கு இடத்தில் இந்த மூன்று அணிகள் வருகின்றன. ஆனால் இந்த மூன்று அணிகளுமே தங்களின் கடைசி போட்டியில் வெற்றி பெற்று இருக்கின்றன. எனவே சிஎஸ்கே அணி இந்த இரண்டு அணிகளுடன் மோதும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மீண்டும் மும்பை மற்றும் ஹைதராபாத் ஃபார்முக்கு வந்திருப்பது, சிஎஸ்கேவுக்கு தலைவலியாகத்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!