சி.எஸ்.கே தக்க வைக்கப்போகும் வீரர்கள் பட்டியல் ரெடி – ஏலம் நடைபெறும் தேதி, போட்டி அட்டவணை என அடுத்தடுத்து வெளியான அப்டேட்ஸ்

0
720
Retained Players of CSK in IPL 2022

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு என அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றது முடிந்துள்ளது. இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெறாத நிலையில், அடுத்த ஆண்டு மீண்டும் பழைய படி இந்தியாவில் 2022 ஐபிஎல் தொடர் நடைபெறும் என்று பிசிசிஐ உறுதி அளித்துள்ளது.

அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் முதல் போட்டி நடைபெறும் என்று தற்போது தகவல் வெளியாகயுள்ளது. இச்செய்தியை கேட்டு அனைத்து மும்பை மற்றும் சென்னை ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

- Advertisement -

அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள மெகா ஏலம்

கடந்த ஆண்டுகளில் ஐபிஎல் தொடர் நடந்து வந்ததைப் போல் அடுத்த வருடம் நடைபெறப் போவதில்லை. நிறைய மாற்றங்கள் அடுத்த வருடம் முதல் அமலுக்கு வர உள்ளது. 8 அணிகள் மட்டும் பங்கேற்ற நிலையில், அடுத்த வருடம் அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய 2 புதிய அணிகள் பங்கேற்க போகின்றன.

அதுமட்டுமின்றி ஒவ்வொரு அணியிலும் இருந்த பழைய வீரர்கள் மத்தியில் மூன்று முதல் நான்கு வீரர்களை மட்டுமே அந்த அணி நிர்வாகங்கள் இனி நடைபெற இருக்கின்ற ஐபிஎல் தொடருக்கு தக்க வைத்துக் கொள்ள முடியும். ஒவ்வொரு அணி நிர்வாகமும் தாங்கள் தக்க வைக்கப்போகும் வீரர்களின் பெயரை வருகிற நவம்பர் 30ஆம் தேதியன்று இறுதியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று பிசிசிஐ கட்டளை விடுத்துள்ளது.

அதன் பின்னர் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 10 அணிகளுக்கும் ஒரு மிகப் பெரிய மெகா ஏலம் நடைபெற இருக்கின்றது. மெகா ஏலம் நடைபெறுவதற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை அடுத்த ஐபிஎல் தொடருக்கு தக்க வைத்துக் கொள்ளப் போகின்றன என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் சென்னை அணி மகேந்திர சிங் தோனி ரவிந்திர ஜடேஜா டு பிளசிஸ் மற்றும் ருத்ராஜ் ஆகிய நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளப் போகின்றது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல டெல்லி அணி அஸ்வின் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை தக்கவைத்துக் கொள்ளப் போகின்றது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்திற்குள் ஒவ்வொரு அணி நிர்வாகம் மூலமாக அடுத்தடுத்து வெளியாகும் என்று நாம் அனைவரும் எதிர்பார்க்கலாம்.