இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு சிஎஸ்கே செய்த நெகிழ்ச்சி காரியம்

0
173
CSK Neeraj Chopra

ஒலிம்பிக்கின் ஈட்டி எறிதல் இந்தியாவுக்காக சிறப்பாக செயல்பட்டு தங்கம் வென்று கொடுத்துள்ளார் நீரஜ் சோப்ரா. கடந்த இரண்டு ஒலிம்பிக்கில் எந்த தங்கமும் வாங்காத நிலையில் இருந்த இந்திய நாட்டுக்கு இம்முறை தங்கம் வாங்கி தந்துள்ளார் நீரஜ் சோப்ரா. 87.58 மீட்டர் தூரம் எறிந்து வெற்றிக் கனியை பறித்துள்ளார் சோப்ரா.

சோப்ராவுக்கு தேசத்தின் பல பகுதிகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று பலரும் அவரை வாழ்த்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட்டை நிர்வகித்து வரும் BCCI அமைப்பு கூட நீரஜ் சோப்ராவுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கி கவுரவப்படுத்தியது.

நீரஜ் சோப்ராவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் செய்த நெகிழ்ச்சி காரியம்

Neeraj Chopra

தற்போது ஐபிஎல் தொடரின் சிறந்த அணிகளுள் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நீரஜ் சோப்ராவுக்கு தனது வாழ்த்துக்களை வழங்கியுள்ளது. வாழ்த்துகளோடு சேர்த்து ஒரு கோடி ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கியுள்ளது.

சென்னை அணி சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மொத்த நாடும் நீரஜ் சோப்ராவால் பெருமை அடைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். அவ்வளவு பெரிய அரங்கில் இந்தியாவை பெருமைப் படுத்தியதற்காக சென்னை அணி நிர்வாகம் சார்பாகவும், தோனி சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளனர்.

ஒரு கோடி ரூபாய் வழங்குவதோடு நில்லாமல் நீரஜ் சோப்ரா எறிந்த 87.58 மீட்டர் தூரத்தை நினைவுபடுத்தும் படியாக ‘8758’ என்ற எண்ணுடன் ஒரு ஜெர்சி ஒன்றையும் தயார் செய்து தருவதாக கூறியுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செய்தது போல இன்னமும் பல அணிகள் செய்ய முன் வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.