சிஎஸ்கே, ஆர்சிபி அணியிலிருந்து நீக்கப்படும் முக்கிய வீரர்கள்; வெளியேற்றப்பட்ட வீரர்கள் விபரம்!

0
31684

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பு சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி இரு அணிகளில் இருந்தும் வெளியேற்றப்படும் வீரர்களின் விபரம் பற்றி இங்கே காண்போம்.

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் முன்பு ஒவ்வொரு அணியும் வீரர்கள் பரிமாற்றம் முறையின் மூலம் சில வீரர்களை வேறு அணிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். இதற்கான கடைசி நாள் வருகிற நவம்பர் 15ஆம் தேதி ஆகும். அதற்குள் இந்த பரிமாற்றம் மற்றும் அதன் ஒப்பந்தத்தின் முழு விவரங்களை ஐபிஎல் நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

- Advertisement -

அதன் பிறகு டிசம்பர் மாதம் சிறிய அளவிலான ஏலம் நடைபெறும். அப்போது அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்கள் மற்றும் கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படாமல் இருந்த வீரர்கள் என பலரும் இந்த ஏலத்தில் பங்குபெறுவர் இதிலிருந்து தேவையான வீரர்களை அணிகள் எடுத்துக் கொள்ளலாம். இப்படியான வழிமுறை இந்த ஆண்டு கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி இரு அணிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்களின் விவரங்களை நாம் இங்கு காண்போம். ஆர்.சி.பி அணியிலிருந்து பெகரன்டாஃப் மும்பை அணிக்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். மேலும் டேவிட் வில்லே, சித்தார்த் கவுல், ரூதர்ஃபோர்ட், ஆகாஷ் தீப் மற்றும் கரண் சர்மா ஆகியோர் வெளியேற்றப்பட உள்ளதாக தற்போது வரை தகவல்கள் வந்திருக்கிறது.

அதே போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஆடம் மில்னே, கிரிஸ் ஜோர்டன், என் ஜெகதீஷ் மற்றும் மிட்ச்செல் சான்ட்னர் ஆகியோர் வெளியேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வருகிறது. இவர்களுடன் பிராவோ மற்றும் ராயுடு ஆகியோரின் பெயர்களும் அடிபடுவதால் ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளில் எந்த அணியில் இருந்து வேறொரு அணிக்கு வீரர்கள் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர் மற்றும் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல், வெளியேற்றப்பட்ட வீரர்களின் பட்டியல் என ஒவ்வொரு அணிகளின் விபரமும் நவம்பர் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.