“அணிக்கு வெளியில் இருந்து வைக்கப்படும் விமர்சனங்கள் குப்பைகள் – முன்னாள் வீரர்களுக்கு கேப்டன் ரோகித் சர்மா தாக்கு!

0
126

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்தத் தொடரின் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் நாளை நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் தொடங்க இருக்கிறது.

இந்தியா அணி தற்போது 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றிருந்தாலும் இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று இந்திய அணிக்கு புதிய சவாலை கொடுத்திருக்கிறது. உலகச் பெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டுமானால் நான்காவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி கட்டாயம் ஜெயித்தே ஆக வேண்டும்.

- Advertisement -

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் இந்தப் போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் போட்டியின் முன்பான பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின்போது இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை மறைமுகமாக தாக்கியிருக்கிறார் ரோஹித் சர்மா.

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி மித மிஞ்சிய நம்பிக்கையில் ஆடியதால் தோல்வி அடைந்ததாக குறிப்பிட்டு இருந்த ரவி சாஸ்திரி. அவர் வர்ணனையின் போது இதனை குறிப்பிட்டார். இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடிய சில ஷாட்களை பாருங்கள் இவையெல்லாம் டெஸ்ட் போட்டியில் ஆடக்கூடிய ஷாட்கலா என கேள்வி எழுப்பி இருந்தா ரவி சாஸ்திரி. அடுத்தடுத்து இரண்டு டெஸ்ட் போட்டிகளை தொடர்ச்சியாக வெற்றி பெறும் போது ஓவர் கான்ஃபிடன்ஸ் ஏற்படும் என தெரிவித்த அவர் அதன் காரணமாக போட்டிகளில் தவறு நடக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதில் அளித்து இருக்கும் ரோஹித் சர்மா” அடுத்தடுத்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுவிட்டு ஒரு போட்டியில் தோல்வியடையும்போது ஓவர் கான்ஃபிடன்ட் காரணமாக தனி தோற்றதாக வெளியில் உள்ளவர்கள் நினைக்கின்றார்கள். அது முற்றிலும் தவறான ஒன்று. எல்லா வீரர்களுமே வெற்றிக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்றுதான் நினைப்பார்கள் எனக் கூறினார் ரோஹித் சர்மா.

- Advertisement -

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய ரோஹித் சர்மா அணிக்கு வெளியில் இருந்து பேசுபவர்களுக்கு அணியின் திட்டங்களை பற்றி எதுவும் தெரியாது. அவர்களது கருத்து அணியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை எனக் கூறினார். இந்தியா ஒழுங்காக பேட்டிங் செய்யாததே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது என குறிப்பிட்ட அவர் இதுபோன்ற பந்துகள் திரும்பும் ஆடுகளங்களில் அதை எவ்வாறு முறியடித்து இந்த வகையில் ரன் சேர்க்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்ட வேண்டும் என தெரிவித்தார். திறமையை விட எதிரணியின் பந்துவீச்சாளர்களை மனதளவில் எவ்வாறு தயார் கொள்கிறோம் என்பதில்தான் ஒரு பேட்ஸ்மனுக்கான உண்மையான டெஸ்ட் இருக்கிறது என்று கூறினார் ரோகித் சர்மா.