ஐபிஎல் தொடரில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை வாங்கிய 5 வீரர்கள்

0
132
MS Dhoni in CSK

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் சிறப்பாக விளையாடிய வீரர்கள் ஆட்டநாயகன் விருது வழங்கப்படும். அந்த போட்டியில் அவர் வெற்றிக்கு எந்த அளவு பங்களித்திருக்கிறார் என்பதைப் பொருத்து அந்த விருது வழங்கப்படும்.

அப்படி இத்தனை ஆண்டுகாலம் நடந்துள்ள ஐபிஎல் தொடரில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை கைப்பற்றிய சிறந்த 5 வீரர்களை பற்றி பார்ப்போம்.

5. டேவிட் வார்னர் – 17 முறை

டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில் 145 போட்டிகளில் விளையாடி 5447 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் அவரது பேட்டிங் அவரேஜ் 42.22 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 140.13 ஆகும். ஹைதராபாத் அணிக்காக அவர் மிக சிறப்பாக விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 2014 ஆம் ஆண்டு ஒற்றை ஆளாக நின்று ஹைதராபாத் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்று இறுதிப் போட்டியிலும் வெற்றி பெறச் செய்தார்.

மேலும் 2015, 2017 மற்றும் 2019 ம் ஆண்டுகளில் மூன்று முறை ஆரஞ்சு தொப்பியை அவர் வாங்கியிருக்கிறார். இதுவரை எந்த ஒரு வீரரும் மூன்று முறை ஆரஞ்சு தொப்பியை வாங்கியதில்லை. ஆட்டநாயகன் விருதை டேவிட் வார்னர் 17 முறை வாங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

4. மகேந்திர சிங் தோனி – 17 முறை

2008ஆம் ஆண்டு முதல் தற்போது தற்பொழுது வரை சென்னை அணியை ஒரே வீரராக நின்று தலைமை தாங்கி வருகிறார். 2010, 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் சென்னை அணியை வெற்றி பெறச் செய்தார். மேலும் மகேந்திர சிங் தோனி 206 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4669 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் அவரது பேட்டிங் அவரேஜ் 40.25 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 136.64 ஆகும்.

மிக சிறப்பாக ஐபிஎல் தொடரில் பல போட்டிகளில் சென்னை அணிக்காக இறுதியில் களம் இறங்கி விளையாடி இருக்கிறார். இவரது சிறப்பான பேட்டிங் மூலம் நிறைய போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றிருக்கிறது. இவரும் டேவிட் வார்னர் போல 17 முறை ஆட்டநாயகன் விருதைப் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. ரோகித் சர்மா – 18 முறை

டெக்கான் சார்ஜஸ் அணிக்காக 2009 ஆம் ஆண்டு ஒரு வீரராக விளையாடி கோப்பையை கைப்பற்றியதோடு மட்டுமல்லாமல் சிறந்த வீரருக்கான விருதையும் கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து மும்பை அணியில் விளையாட தொடங்கினாள் மும்பை அணியில் சிறப்பாக விளையாடிய இவருக்கு தலைமை பொறுப்பு வந்தது.

2013 முதல் சென்ற ஆண்டுவரை மொத்தமாக எட்டுமுறை மும்பை அணியை வழிநடத்தி ஐந்து முறை ( 2013, 2015, 2017, 2019 & 2020 கோப்பையை கைப்பற்றி கொடுத்துள்ளார். மேலும் மும்பை அணியில் அதிக ரன்கள் குவித்த வீரர் ஒருவர் மட்டும்தான். மொத்தமாக 203 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 5480 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் அவரது பேட்டிங் அவரேஜ் 31.49 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 130.51 ஆகும். இவர் மொத்தமாக பதினெட்டு முறை ஆட்டநாயகன் விருதை கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2. கிறிஸ் கெயில் – 22 முறை

கிட்டுவது போட்டிகளை பொறுத்த வரையில் பல்வேறு சாதனைகளை தனது பெயருக்கு பின்னால் வைத்திருக்கும் இவர் மொத்தமாக 135 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4950 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் இவரது பேட்டிங் அவரேஜ் 40.24 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 149.46 ஆகும். ஒரு போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் (175*) எடுத்த ஒரே வீரர் இவர் மட்டுமே.

மிக சிறப்பாக பல போட்டிகளில் விளையாடி மொத்தமாக 22 போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதை வருகை பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1. ஏபி டிவில்லியர்ஸ்

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கான பல போட்டிகளில் ஒற்றை ஆளாக நின்று தனது அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். மொத்தமாக 172 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 5056 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் அவரது பேட்டிங் ஆவரேஜ் 40.77 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 152.38 ஆகும்.

பல போட்டிகளில் பெங்களூர் அணிக்காக சிறப்பாக விளையாடிய இவர் மொத்தமாக 24 முறை ஆட்டநாயகன் விருதை கைப்பற்றி, மிக அதிக முறை ஆட்டநாயகன் விருதை கைப்பற்றிய முதல் வீரராக தற்போது வரை நிலைத்து நிற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.