ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டும் விளையாடிய பிரபல வீரர்கள்

0
238
Rahul-Dravid
Rahul Dravid (Photo: Getty Images)

கிரிக்கெட் முதன் முதலில் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் தான் ஆரம்பிக்கப் பட்டது. அதன் பின்னர் நாளடைவில் டெஸ்ட் கிரிக்கெட் போல் ஒரு நாள் போட்டிகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் போல டி20 போட்டிகளும் நடத்தப்பட்டன.

மூன்று கிரிக்கெட் பார்மெட்டும் ஒன்றுக்கொன்று சலித்தது கிடையாது. இந்த மூன்று கிரிக்கெட் பார்ம்மெட்டுக்கும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனாலும் டி20 கிரிக்கெட் போட்டிகள் மிகவும் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டன. அதன்காரணமாக ஆரம்பகாலத்தில் விளையாட ஆரம்பித்த பிரபல வீரர்கள் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கும் வேளையில் அவ்வளவாக 20 ஓவர் போட்டிகள் விளையாட முடியாமல் போனது. அப்படி விளையாட முடியாமல் தங்கள் கேரியரில் ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டும் விளையாடிய நட்சத்திர வீரர்களை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட் போட்டி ஒரு மதம் என்றால் அதன் கடவுள் சச்சின் டெண்டுல்கர் என்று சொல்லும் அளவுக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மிக அற்புதமாக விளையாடிய வீரர். நவம்பர் 17-ஆம் தேதி 1979-ஆம் ஆண்டு கராச்சியில் தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடத் தொடங்கினார். அன்று தொடங்கி 2013 ஆம் ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி வரை சுமார் 24 ஆண்டுகள் இந்திய அணிக்காக ஓயாது விளையாடிய ஒரு வீரர்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 15 ஆயிரத்து 921 ரன்களும் ஒருநாள் போட்டிகளில் 18,426 குவித்துள்ளார். ஆனால் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டும் தான் விளையாடி உள்ளார். அவர் விளையாடிய முதல் போட்டியில் இந்தியாவுக்கு முதல் டி20 போட்டி ஆகும். அந்த போட்டியில் 10 ரன்கள் குவித்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்சமாம் உல் ஹக்

பாகிஸ்தான் கிரிக்கெட் பக்கங்களை திருப்பி பார்த்தால் இவரது பெயர் நிச்சயமாக இடம் பெற்றிருக்கும். பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக பல போட்டிகளில் மிக அற்புதமாக விளையாடி இருக்கிறார். இவர் சிலகாலம் பாகிஸ்தான் அணியை தலைமை தாங்கி வந்ததும் குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 11 ஆயிரத்து 739 ரன்களைக் குவித்துள்ளார். அதேசமயம் மறுமுனையில் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை மொத்தமாக 8830 ரன்கள் குவித்துள்ளார்.

- Advertisement -

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இதுவரை நிறைய போட்டிகளில் விளையாடி உள்ள இன்சமாம் ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டும் தான் விளையாடி உள்ளார். அவர் விளையாடிய அந்த டி20 கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஆகும். அந்த போட்டி இங்கிலாந்து அணிக்கு எதிராக 2006ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்த போட்டியில் இன்சமாம் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஜேசன் கில்லஸ்பி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தலைசிறந்த பந்து வீச்சாளர் கில்லஸ்பி ஆவார். ஆஸ்திரேலிய அணிக்காக 71 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 97 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 259 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் 142 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார். இவரும் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டும் தான் விளையாடி இருக்கிறார்.

அந்த போட்டி 2005 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்றது. அந்த போட்டியில் 18 பந்துகளை மேற்கொண்டு 24 ரன்களை குவித்தார் மேலும் பந்துவீசி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் டிராவிட்

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் மிக அற்புதமாக விளையாடிய ஒரு வீரர் ராகுல் டிராவிட். அதே சமயம் ஒரு நாள் போட்டிகளிலும் கூட இவர் அற்புதமாக விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் சுவர் என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டும் தான் விளையாடி உள்ளார்.

2012ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு டி20 போட்டியில் விளையாடினார். அந்த போட்டியில் இவர் 32 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் 3 சிக்சர்கள் குவித்தார், அந்த போட்டியில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 150 ஆகும். அதன் பின்னர் இவர் எந்தவித டி20 போட்டியில் விளையாடவில்லை.