13 வருடங்களாக ஐபிஎல் தொடரை வெல்லாத நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள்

0
168
Rahane and Virat Kohli IPL

இந்தியாவில் கடந்த 13 ஆண்டுகளாக ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை மற்றும் மும்பை ஆகியகல்லூரிகளில் அணிகள் தான் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். மும்பை அணி 4 முறையும் சென்னை அணி 3 முறையும் கோப்பையை வென்றுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த அணிகளில் விளையாடிய வீரர்கள் அனைவரும் ஐபிஎல் கோப்பையை வென்ற பெருமையை பெற்றுள்ளனர். ஆனால் ஒரு சில மிகச்சிறந்த வீரர்கள் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தி பல சாதனைகள் படைதிருந்தாலும் அவர்களால் ஒரு வீரர்களாக தற்போது வரை கோப்பையை வெல்ல முடிந்தது இல்லை. தற்போது அப்படிப்பட்ட வீரர்களின் பட்டியலை தற்போது பார்ப்போம்.

5. விராட் கோலி

இந்திய அணியில் விராட் கோலி தலைசிறந்த வீரர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். விராட் கோலி இந்திய அணியில் உலகக்கோப்பையை வென்ற வீரர். ஆனால் அவர் ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை.

- Advertisement -

13 வருடங்களாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் இவர் நடித்த மொத்த ரன்கள் 6 ஆயிரத்தை தாண்டும். மேலும் 2014ம் ஆண்டு இவர் ஒரு தொடரில் மொத்தமாக 973 ரன்கள் குவித்தார். ஒரு தொடரில் இவ்வளவு ரன்கள் குவித்த ஒரே வீரர் இவர் மட்டுமே. 2009 2011 மற்றும் 2016 என மூன்று ஆண்டுகளில் இறுதி வரை சென்று ஐபிஎல் தொடரை வெல்லும் வாய்ப்பை இவர் தவறவிட்டார்.

4. அமித் மிஸ்ரா

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களில் இரண்டாவது வீரராக இவர் திகழ்கிறார். இவரால் ஒருமுறைகூட ஐபிஎல் தொடரை வெல்ல முடியவில்லை என்பது நம் அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கும்.

ஐபிஎல் தொடரின் ஆரம்ப காலகட்டத்தில் டெல்லி அணிக்காக விளையாடி, அதன் பின்னர் 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.அதன் பின்னர் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி, 2015ஆம் ஆண்டு முதல் மீண்டும் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார்.

- Advertisement -

இன்னும் 5 விக்கெட்டுகள் எடுத்தால், லசித் மலிங்காவின் சாதனையை முறியடித்து ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக தனது முத்திரையை பதிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. கிறிஸ் கெயில்

டி20 கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரையில் சர்வதேச அளவில் அதிக ரன்கள் குவித்த ஒரே ஜாம்பவான் இவர் மட்டுமே. ஆரம்பத்தில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்தார் அதன் பின்னர் 2011ம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை பெங்களூர் அணிக்காக விளையாடி, 2018 ஆம் ஆண்டு முதல் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார்.

2011 மற்றும் 2012 என அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகளில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றிய இவரால் ஒரு முறை கூட ஐபிஎல் தொடரை வெல்ல முடியவில்லை என்கிற செய்தி நமக்கு வருத்தத்தை கொடுக்கும். இவர்களை விளையாடுவதை பார்க்கவே நிறைய ரசிகர்கள் மைதானத்திற்கு செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2. ஏபி டிவிலியர்ஸ்

முதல் மூன்று ஆண்டுகள் டெல்லி அணியில் விளையாடி அதன் பின்னர் 2011ம் ஆண்டு முதல் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். பெங்களூர் அணிக்காக இதுவரை அனைத்து போட்டிகளிலும் தன்னால் இயன்றவரை சிறப்பாக விளையாடி வெற்றி பெறச் செய்திருக்கிறார்.

ஐபிஎல் தொடரிலேயே 24 முறை ஆட்டநாயகன் விருதை கைப்பற்றிய ஒரே வீரர் இவர் மட்டுமே. 24 முறை ஆட்டநாயகன் விருதை கைப்பற்ற முடிந்தது இவரால் இன்னும் ஒரு முறை கூட ஐபிஎல் தொடரை கைப்பற்ற முடியவில்லை என்பது வேதனைக்குரிய செய்தியாகும்.

1. ரஹானே

2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில் மும்பை அணிக்காக விளையாடி அதன்பின்னர் 2010ம் ஆண்டு முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஏழு ஆண்டுகள் தொடர்ச்சியாக விளையாடினார். அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்காக விளையாடினார். 2018 மற்றும் 2019ம் ஆண்டில் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி, 2020-ம் ஆண்டு முதல் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

151 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 3941 ரன்கள் குவித்திருக்கிறார். ஐபிஎல் போட்டிகளில் 28 முறை அரை சதங்களையும் இரண்டு முறை சதங்களும் குவித்த இவர் இன்னும் ஒரு முறை கூட ஐபிஎல் தொடரை வென்றது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.