டாப் 10

விளையாட்டு வீராங்கனைகளை கரம் பிடித்த 5 பிரபல கிரிக்கெட் வீரர்கள்

கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரையில் ஒரு சிலர் நடிகைகளை மணமுடித்து இருந்திருப்பார்கள். ஆனால் ஒரு சிலர் அதற்கு மாறாக விளையாட்டு வீராங்கனைகளை மணம்புரிந்து இருக்கின்றனர். அப்படி கிரிக்கெட் விளையாடிய தலைசிறந்த வீரர்கள் யாரெல்லாம் விளையாட்டு வீராங்கனைகளை மணம் புரிந்து இருக்கிறார்கள் என்று பார்ப்போம்

- Advertisement -

தினேஷ் கார்த்திக் – தீபிகா பல்லிக்கல்

தினேஷ் கார்த்திக் உடைய முதல் திருமணம் அவ்வளவு நீண்ட காலம் நீடிக்கவில்லை. எனவே அதற்கு அடுத்த படியாக தீபிகா பல்லிக்கலை ஆகஸ்ட் 2015 ஆம் ஆண்டு கரம் பிடித்தார்.

தீபிகா ஒரு இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை ஆவார். டாப் டென் சிறந்த ஸ்குவாஷ் வீராங்கனைகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2014ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஜோஸ்னா சின்னப்பா உடன் இணைந்து இவர் இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் சில்வர் பதக்கங்களையும் இவர் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷிகர் தவான் – ஆஷா முகர்ஜி

ஹர்பஜன்சிங் மூலமாக 2009ஆம் ஆண்டு சமூக வலைத்தளத்தில் இவர் முதன்முதலில் ஆஷா முகர்ஜியை கண்டு கொண்டார். அதன் பின்னர் மூன்று ஆண்டுகள் இவர்கள் இருவரும் காதலித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பின்னர் இவர்கள் இருவரும் மணமுடித்து கொண்டார்கள். திருமணத்திற்கு முன்பு ஆஷா அடிப்படையில் ஒரு பிரபலமான கிக் பாக்சிங் வீராங்கனை ஆவார். எப்பொழுதும் ஜிம்மில் பயிற்சி எடுத்துக் கொண்ட இவர் இருப்பார் என்று ஷிகர் தவான் ஒருமுறை கூறியிருக்கிறார். மேலும் தன்னுடைய ஃபிட்னஸ்ஸில் பெரிய உதவியை அவர் புரிந்து இருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார்.

சோயப் மாலிக் – சானியா மிர்சா

வேறு நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்த ஒரே கிரிக்கெட் வீரர்களில் இவரும் ஒருவர். 2009 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் இணைந்து காதலிக்க தொடங்கினார்கள். அப்பொழுது இரு நாட்டிலிருந்து ரசிகர்களும் இவர்களுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர். இருப்பினும் இறுதியில் காதல் தான் வெற்றி பெற்றது.

சானியா மிர்சா இந்திய அளவில் பல வெற்றிகளை டென்னிஸ் விளையாட்டில் பெற்றுக் கொடுத்துள்ளார். இதுவரை மொத்தமாக 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை இவர் பெற்றிருக்கிறார். மேலும் 2016 ஆம் ஆண்டு இவருக்கு இந்திய அரசாங்கம் பத்மபூஷன் விருது அளித்து பெருமைப்படுத்தியது.

கேதர் ஜாதவ் – ஸ்னேஹல் பிரமோத்

கேதர் ஜாதவ் மணம் புரிந்த பெண்ணும் ஒரு கிரிக்கெட் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.ஸ்னேஹல் பிரமோத் ஒரு விக்கெட் கீப்பிங் பேட்ஸ் வுமன் ஆவார். மகாராஷ்டிரா மற்றும் வெஸ்ட் ஜோன் கிரிக்கெட் அணிக்காக இவர் விளையாடி இருக்கிறார்.

மேலும் இவர் உள்ளூர் விளையாட்டு தொடர்களில் ஒரிசா மற்றும் ஹைதராபாத் அணி சிறப்பாக விளையாடி இருக்கிறார். இவர் மொத்தமாக ஒரு ஃபர்ஸ்ட் கிளாஸ், 37 லிஸ்ட் ஏ மற்றும் 31 20 ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இஷாந்த் ஷர்மா – பிரதிமா சிங்

பாத்திமா சிங் அடிப்படையில் ஒரு பேஸ்கட்பால் வீராங்கனை ஆவார். 2010-11 ஆண்டுகளில் இந்திய அளவில் நடந்த யுனிவர்சிடி பேஸ்கட்பால் தொடரில் பிரதிமா பங்கு பெற்று விளையாடி இருந்தார். அப்பொழுது இஷாந்த் ஷர்மா அந்தப் போட்டிக்கு நடுவராக வரவழைக்கப்பட்டு இருந்தார். அங்கிருந்து இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது தற்பொழுது கரம் பிடித்து உள்ளனர்.

பிரதிமா இந்திய அணிக்காக ஆசிய அளவில் நடந்த பேஸ்கட் பால் சாம்பியன்ஸ் தொடரில் 3 தடவை பங்கு பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஏசியன் கேம்ஸ் தொடரிலும் இவர் பங்கு பெற்றிருந்தார்.

Published by