நாட்டுக்காக விளையாடுவதா அல்லது ஐபிஎல் தொடரில் விளையாடுவதா – முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலையில் சிக்கியுள்ள தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள்

0
1073
Cricket Southafrica and IPL 2022

டீ காக், மார்க்ரம், ரபாடா, வேன் டெர் டஸ்சென் உட்பட ஒரு சில தென் ஆப்பிரிக்க வீரர்கள் நடக்க இருக்கின்ற ஐபிஎல் தொடரில் விளையாட தயாராக இருக்கின்றனர். ஐபிஎல் தொடர் வருகிற 26ஆம் தேதி துவங்கி மே மாதம் 29ம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்த டெஸ்ட் தொடர் மார்ச் 16ஆம் தேதி முடிவுக்கு வருகிறது.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணி வீரர்கள் ஏப்ரல் 5ம் தேதிக்கு மேல் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்வார்கள். இங்கிலாந்து இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவு அணி வீரர்கள் முதல் நாளில் இருந்து கலந்து கொள்வார்கள் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

ஆனால் தென் ஆப்பிரிக்க அணி வீரர்களுக்கு தற்பொழுது ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பங்களாதேஷ் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு வருகிற மார்ச் 18ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. மார்ச் 18ஆம் தேதி முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வறை 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரிலும், 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரிலும் இந்த இரு அணிகளும் பலப்பரீட்சை மேற்கொள்ள இருக்கின்றனர்.

முடிவை தென்னாபிரிக்க அணி வீரர்களிடம் விட்டுவிட்ட தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம்

மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 11ம் தேதி வரையில் கிட்டத்தட்ட பல போட்டிகள் நடைபெற்று முடிந்து விடும். தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடினாலும் விளையாடலாம் அல்லது பங்களாதேஷ் அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவில் ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி தொடரிலிலும்,விளையாடலாம் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் தற்போது கூறியுள்ளது.

இந்த இரண்டு சாய்ஸில் எந்த சாய்ஸை தேர்ந்தெடுப்பதென்பது தென் ஆப்பிரிக்கா வீரர்களின் பொறுப்பு. இறுதி முடிவை அவர்களே எடுக்கட்டும் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் முடிவெடுக்கும் உரிமையை அவர்களிடமே விட்டுவிட்டது. அதன்படி இதில் எந்த முடிவை இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி வீரர்கள் எடுப்பார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.