அவ்வளவு எளிதில் உச்சரிக்க முடியாத 5 கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள்

0
231
Chaminda Vaas and Lonwabo Tsotsobe Names

ஒரு சில கிரிக்கெட் வீரர்களின் பெயரை நாம் அவ்வளவு எளிதில் உச்சரித்து விட முடியாது. ஒரு சில பெயர்கள் பெரிதாகவும் அல்லது ஒரு சில பெயர்கள் எளிதாக படுத்து விட முடியாதபடி இருக்கும்.

அப்படிப்பட்ட பெயர்களை நாம் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் கூறி தான் நாம் புரிந்து கொள்ள வேண்டியதாக இருக்கும். அப்படி அவ்வளவு எளிதில் உச்சரிக்க முடியாத கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை பற்றி பார்ப்போம்

லோன்வபே ட்சிட்சோபே

தென் ஆப்பிரிக்கா அணிக்கு விளையாடிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு சிறந்த வீரர் இவர். இவரது பந்துகள் மிக வேகமாக இருக்கும். அவ்வளவு எளிதில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு இவரது பந்துகளை மேற்கொண்டு விட முடியாது. மிகச் சிறப்பாக இவர் தென் ஆப்பிரிக்க அணி காலிறுதி வரை விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் சூதாட்டம் காரணமாக இவர் தனது கிரிக்கெட் கேரியரை முடித்துக் கொண்டார்.

இவரது பெயரை அவ்வளவு எளிதில் கிரிக்கெட் ரசிகர்கள் புரிந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு முறை இவரின் பெயரை உச்சரிக்கும் பொழுது நிதானமாக அல்லது பொறுமையாக தான் அனைவரும் உச்சரிப்பார்கள்.

ம்புமேலெலோ ம்பங்வா

ஜிம்பாவே அணிக்காக விளையாடிய இவரை அனைத்து இந்திய ரசிகர்களுக்கும் எளிதாக தெரியும். உலகில் நடக்கும் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளுக்கு வர்ணனை செய்வதில் இவர் வல்லவர். குறிப்பாக இந்திய பிரீமியர் லீக் போட்டிகளுக்கு இவர் அதிக அளவில் வர்ணனை செய்வார்.

இவரது பெயரை அவ்வளவு எளிதில் யாரும் கூறி விட முடியாது. அதன் காரணமாகவே அவரை செல்லமாக அனைவரும் போமி அல்லது போம் என்று அழைப்பார்கள்.

வர்ணகுலசூரிய படபேண்டிஜி உஷாந்த ஜோசப் சமிந்தா வாஸ்

இலங்கையைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவரின் பணிகளை மேற்கொள்வதற்கு அனைவரும் பயப்படுவார்கள் என்றுதான் கூறவேண்டும். இவர் விளையாடிய காலத்தில் அந்த அளவுக்கு எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து அவர்களின் விக்கெட்டுகளை மிக அற்புதமாக கைப்பற்றுவார்.

இவரது முழுப் பெயரை அவ்வளவு எளிதில் யாராலும் கூறிவிட முடியாது. அந்த அளவுக்கு நீளமான ஒரு பெயர் இவரது பெயராகும். எனவே அவரை அனைவரும் சுருக்கமாக வாஸ் என்றுதான் அழைப்பார்கள்.

கபிலா இந்தக வீரக்கொடி விஜெகுணாவர்தனே

இலங்கை அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடியவர். இலங்கை அணிக்காக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். மேலும் 26 ஒருநாள் போட்டியில் இவர் விளையாடியிருக்கிறார்.

இவரது பெயரை சமிந்தா வாஸ் பெயர் போல அவ்வளவு எளிதில் யாராலும் படுத்திவிட முடியாது. அப்படியே படித்து விட்டாலும் அவ்வளவு எளிதில் உச்சரித்து விட முடியாது. அவ்வளவு நீளமான மற்றும் உச்சரிக்க முடியாத பெயரை இவர் கொண்டிருக்கிறார்.

ஹீத் டெல்ஹியோடேரங்கி டேவிஸ்

நியூசிலாந்து அணிக்காக விளையாடிய இவரது ஆரம்ப மற்றும் இறுதிக் பெயரை மிக எளிதாக நம்மால் உச்சரித்து விட முடியும். ஆனால் இவரது நடு பெயரை அவ்வளவு எளிதில் நம்மால் உச்சரித்து விடமுடியாது.

இவரது நடு பெயர் மயோரி வழக்கப்படி அமைந்த பெயராகும். இந்தப் பெயருக்கு ஆங்கில மொழியாக்கத்தின் படி சொர்க்கத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற சக்தி என்ற பொருளாகும்.