சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை அவுட்டாகாமல் இறுதிவரை நின்ற 5 வீரர்கள்

0
454
Muttiah Muralitharan and MS Dhoni

கிரிக்கெட் முதல் முதலில் டெஸ்ட் வடிவத்தில் ஆரம்பமானது. அதன்பின்னர் ஒருநாள் போட்டிகள் துவங்கப்பட்டு தற்போது டி 20 மற்றும் டி10 போட்டிகள் விளையாடப்பட்டு வருகின்றன. ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் நன்றாக விளையாடி அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற கிரிக்கெட் அணிகள் டெஸ்ட் உரிமையை பெற்றது நம் அனைவருக்கும் தெரியும்.

அப்படிப்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு சாதனைகள் இடம் பெற்றிருந்தாலும் அதில் ஒரு முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது ஆட்டத்தின் இறுதி வரை ஒரு வீரர் ஆட்டமிழக்காமல் நிற்பதுதான். டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவ்வாறு அதிக முறை அவுட்டாகாமல் இறுதிவரை நின்ற ஒரு சில வீரர்களை பற்றி தற்போது பார்ப்போம்

- Advertisement -

சமிந்தா வாஸ் – 108 முறை

இலங்கைக்காக விளையாடிய ஒரு தலைசிறந்த வீரர்களில் இவரும் குறிப்பிடத்தக்கவர். பேட்டிங்கில் அவ்வளவு பெரிய பங்களிப்பை இவர் அளிக்காமல் இருந்திருந்தாலும் பவுலிங்கில் மிக சிறப்பாக விளையாடி இருக்கிறார். இவர் எப்பொழுதும் அணியில் கடைசி வீரராக களம் இறங்குவார். அதன் காரணமாகவே அணி வீரர்கள் அனைவரும் அவுட்டாகி செல்ல இறுதி வரை இவர் அவுட்டாகாமல் இருப்பார்.

அதன்படி இவர் டெஸ்ட் போட்டிகளில் 35 முறையும், ஒருநாள் போட்டிகளில் 72 முறையும் அதேபோல டி20 போட்டிகளில் ஒருமுறை அவுட்டாகாமல் மொத்தமாக 108 முறை அவுட்டாகாமல் இறுதிவரை நின்று இருக்கிறார்.

ஷான் பொல்லாக் – 113 முறை

தென் ஆப்பிரிக்காவில் எவ்வளவு பெயர் வேகப்பந்து வீச்சாளராக இடம்பெற்றிருந்தாலும் ஒரு சில வீரர்கள் அனைவராலும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது அந்த அளவுக்கு மிக அபாயகரமாக எதிரணி பேட்ஸ்மேன்களை பயமுறுத்திய ஒரு வீரர் ஷான் பொல்லாக் ஆவார்.

- Advertisement -

இவரும் தென் ஆப்பிரிக்கா அணிக்காக கீழிறங்கி தான் விளையாடுவார். அதன் காரணமாகவே ஒருநாள் போட்டிகளில் 72 முறையும், டெஸ்ட் போட்டிகளில் 39 முறையும் அதேபோல டி20 போட்டிகளில் இரண்டு முறையும் இறுதி வரை அவுட் ஆகாமல் இருந்திருக்கிறார். அதன்படி மொத்தமாக இவர் 113 முறை அவுட் ஆகாமல் இருந்திருக்கிறார்.

முத்தையா முரளிதரன் 119 முறை

இலங்கைக்காக மிக அற்புதமாக விளையாடியவர். ஸ்பின் பவுலிங்கில் இவர் செய்த சாதனையை அவ்வளவு எளிதில் யாராலும் முறியடிக்க முடியாது என்பதுதான் உண்மை.

இவரும் இலங்கை அணிக்காக கடைசியில் வந்த தான் விளையாடுவார். அதன் காரணமாகவே 56 முறை டெஸ்ட் போட்டிகளில் அவுட்டாகாமல் இறுதிவரை நின்று இருக்கிறார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் 63 முறை அவுட்டாகாமல் இருந்திருக்கிறார். அதன் காரணமாக மொத்தமாக இவர் 119 முறை அவுட் ஆனது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜேம்ஸ் ஆண்டர்சன் – 135 முறை

இங்கிலாந்து அணியில் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக தற்போது வரை இவர் விளையாடி வருகிறார். 212 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி இருக்கிறார். அதில் 89 முறை அவுட் ஆனது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 43 முறை ஒரு நாள் போட்டிகளிலும் அதே போல மூன்று முறை டி20 போட்டிகளில் இவர் இறுதிவரை அவுட்டாகாமல் இருந்திருக்கிறார். அதன் காரணமாக மொத்தமாக இவர் 135 போட்டிகளின் இறுதி வரை அவுட் ஆகாமல் இருந்திருக்கிறார்.

மகேந்திர சிங் தோனி – 142 முறை

மேற்கண்ட அனைத்து வீரர்களும் பவுலிங் போடக் கூடியவர்கள் ஆனால் ஒரே ஒரு பேட்ஸ்மென் இடம் பெற்று இருப்பது மூலமாகவே நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இவர் ஒரு தலைசிறந்த பினிஷர் என்பதுதான்.

இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் இறுதிவரை அவுட்டாகாமல் நின்று வெற்றிகளைப் பெற்றுத் தந்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் 84 முறையும் டி20 போட்டிகளில் 42 முறையும் இறுதி வரை அவுட் ஆகாமல் இருந்திருக்கிறார். அதேபோல டெஸ்ட் போட்டிகளிலும் 16 முறை இறுதி வரை அவுட் ஆகாமல் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி மொத்தமாக இவர் 142 முறை அவுட்டாகாமல் இறுதிவரை இருந்திருக்கிறார்.