கின்னஸ் உலக சாதனையை தங்களது பெயருக்கு பின்னால் வைத்திருக்கும் 11 கிரிக்கெட் வீரர்கள்

0
2297
Cricket Guniness Records

உலக அளவில் கிரிக்கெட் போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது. கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் ஒருவர் இடம் பெற மிகப்பெரிய விஷயத்தை அவர் பண்ணி இருக்க வேண்டும். உலக அளவில் அந்த சாதனையை அவரை விட வேறு யாரும் சிறப்பாக வராத பட்சத்தில் அவரது சாதனை சிறந்த சாதனையாக எடுத்துக்கொள்ளப்பட்டு அவருக்கு கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்படும்.

அப்படி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் அசாதாரணமான சாதனைகளை செய்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்று இருக்கின்றார்கள். அப்படி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற கிரிக்கெட் வீரர்களை பற்றி தற்போது பார்ப்போம்.

- Advertisement -

1. மிக உயரமான கேட்ச் – அலிஸா ஹீலி

Alyssa Healy

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் அலிஸா ஹீலி மிக உயரமான கேட்ச் பிடித்தார். அவர் பிடித்த பந்து தரையிலிருந்து வானத்திற்கு சுமார் 80 மீட்டர் உயரத்திற்கு சென்று அவரது கைக்கு வந்தது. இதன் மூலம் மிக உயரமான கேட்சைஅவர் பிடித்தார் என்கிற அடிப்படையில் அவரது பெயர் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது.

2. உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் – சச்சின் டெண்டுல்கர்

உலக கோப்பை தொடரின் நாயகன் என்று சொன்னால் அது சச்சின் டெண்டுல்கர் மட்டுமே. உலக கோப்பை தொடரில் பேட்டிங்கில் நிறைய சாதனைகளை தனது பெயருக்குப் பின்னால் வைத்திருக்கிறார். இதுவரை நடந்த மொத்த உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் அவர் மட்டுமே.

44 உலக கோப்பை இன்னிங்ஸ்களில் விளையாடி 2278 ரன்கள் குவித்திருக்கிறார். அதனடிப்படையில் உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்கிற அடிப்படையில் இவரது பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற கின்னஸ் உலக சாதனையை சச்சின் டெண்டுல்கர் தனது பெயருக்குப் பின்னால் வைத்திருக்கிறார்.

- Advertisement -

அதுபோல உலக கோப்பை தொடரில் அதிக சதங்கள் (6) குவித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார். அவருடன் இணைந்து ரோகித் சர்மாவும் ஆறு சதங்கள் குவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.அதைத் தொடர்ந்து ஒரு உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் இவர் ஒருவர் மட்டுமே. 2003ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் 673 ரன்கள் குவித்துள்ளார்.

3. ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றியது – மஹபூப் அலம்

Mahaboob Alam

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களாக ஜிம் லேக்கர் மற்றும் அனில் கும்ப்ளே திகழ்கிறார்கள். ஆனால் ஒருநாள் போட்டியில் எந்த ஒரு வீரரும் 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய இல்லை என்று நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கலாம்.

ஆனால் 2014 ஆம் ஆண்டு மோஜம்பிக்வே அணிக்கு எதிராக நேபால் அணியில் விளையாடிய மஹபூப் அலம் ஒரே போட்டியில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை இவர் தனது பெயருக்குப் பின்னால் வைத்து இருக்கிறார்.

4. அதிவேகப் பந்து – ஷோயாப் அக்தர்

2003ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தானைச் சேர்ந்த ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் வேகப்பந்துவீச்சாளர் அக்தர் அதிவேக பந்தை வீசினார்.

அவர் வீசிய அந்த பந்து 161.3 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து வந்தது. இதன் மூலம் அதிவேக பந்து வீசிய கின்னஸ் உலக சாதனையை அவர் தனது பெயருக்குப் பின்னால் வைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

5. அதிகமுறை டெஸ்ட் அணியை தலைமை தாங்கியது – கிரீம் ஸ்மித்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியை கிரீம் ஸ்மித் தன்னுடைய பிறந்த நாளில் (பெப்ரவரி 1, 2013) நூறாவது முறை தலைமை தாங்கினார். இதுவரை மொத்தமாக அவர் 109 முறை தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் போட்டிகளில் தமிழ் தாங்கியிருக்கிறார் 53 போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையில் ஒரு அணியை அதிகமுறை டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கிய என்ன சொல்ல சாதனையை கிரீம் ஸ்மித் தனது பெயருக்குப் பின்னால் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

6. ஜோஸ் பட்லர்

Jos Buttler Jersey

இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் 2019 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் பயன்படுத்திய ஜெர்சியை ஏலத்திற்கு கொண்டு வந்தார்.
கொரோனோவால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு நன்மை செய்யும் விதத்தில், அவர்களது மருத்துவச் செலவுக்கு இந்த ஜெர்சியின் மூலம் கிடைக்கும் முழு தொகையை நன்கொடையாக வழங்குவதாக கூறி ஏலம் எடுத்தார்.

ஏலத்தில் அவரது ஜெர்சி 65 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது. இந்திய மதிப்பில் சுமார் 63 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் ஆகும். ஒரு நற்செயலுக்காக அவரது ஜெர்ஸி இவ்வளவு தொகைக்கு ஏலம் போனது, ரசிகர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் ஒரு கிரிக்கெட் வீரரின் ஜெர்ஸி இவ்வளவு தொகைக்கு ஏலம் போனதன் அடிப்படையில் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் அவரது ஜெர்சி இடம்பெற்றது.

7. உலகின் மிக விலை உயர்ந்த கிரிக்கெட் பேட் – மகேந்திர சிங் தோனி

2011ம் ஆண்டு நடந்த உலக கோப்பை இறுதி போட்டியில் மகேந்திரசிங் பயன்படுத்திய கிரிக்கெட் பேட் ஏலத்திற்கு சென்றது. அந்த கிரிக்கெட் பேட்டை ஆர்கே கிலோபல் ஷேர்ஸ் அண்ட் செக்யூரிட்டிஸ் நிறுவனம் இந்திய மதிப்பில் 83 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது.

இதற்கு முன் வேறு எந்த கிரிக்கெட் படும் இந்த அளவிற்கு விலை போனது கிடையாது. அதன் அடிப்படையில் அதிக தொகைக்கு விலைபோன கிரிக்கெட் பேட் என்கிற கின்னஸ் உலக சாதனையை மகேந்திர சிங் தோனியின் பேட் பெற்றது குறிப்பிடத்தக்கது.

8. அந்தோணி மெக்மோஹான் – ஒரு ஓவரில் 36 ரன்கள்

சர்வதேச அளவில் உலக கோப்பை டி20 தொடரில் வைத்து யுவராஜ் சிங் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்தது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் 2003ம் ஆண்டு ஒரு சிறுவன் தன்னுடைய 13வது வயதில் இந்த சாதனையை செய்திருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்து இருக்காது.

2003ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஒரு உள்ளூர் போட்டியில் செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் அணிக்காக விளையாடிய அந்தோணி மெக்மோஹான் எப்பில்டன் அணிக்கு எதிராக நடந்த ஒரு போட்டியில் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து அசத்தினார். இந்த சாதனையை அவர் செய்த போது அவருக்கு வயது 13 (13 வருடங்கள் மற்றும் 261 நாட்கள்) மட்டுமே.

அதன் அடிப்படையில் மிக இளம் வயதில் இந்த சாதனையை செய்த அவர் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

9. ஷனன் கேப்ரியல் – டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 12வது வீரராக வந்து பேட்டிங் விளையாடியது

Shannon Gabriel Test

2019ஆம் ஆண்டு இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி அதனுடைய இரண்டாவது இன்னிங்சில் விளையாடிக்கொண்டிருந்த போது, டேரன் பிராவோ ஓய்வு ( ரிட்டயர்டு ஹர்ட்) எடுத்துக்கொண்டார்.

பின்னர் அவருக்கு பதிலாக ஜெர்மைன் பிளாக்வுட் வந்து விளையாடினார். இதன் மூலமாக 11 ஆவது வீரராக களமிறங்க வேண்டிய கேப்ரியல் 12 ஆவது வீரராக அந்த போட்டியில் களமிறங்கினார். இதனடிப்படையில் ஒரு போட்டியில் மிகவும் வித்தியாசமாக 12 ஆவது வீரராக வந்து களமிறங்கி விளையாடிய ஷனன் கேப்ரியல் பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

அந்த போட்டியின் முடிவில் இந்திய அணி 255 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும் டெஸ்ட் வரை 2-0 என்கிற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.

10. ஒஸ்மான் கோக்கர் – சர்வதேச அளவில் அதிக வயதில் முதல்முறையாக களமிறங்கிய வீரர்

உலக அளவில் ஏறத்தாள கிரிக்கெட் விளையாட்டை அனைத்து நாடுகளும் விளையாட தொடங்கிவிட்டன. 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேலும் இரண்டு நாடுகள் கிரிக்கெட் விளையாட்டை சர்வதேச அளவில் விளையாட தொடங்கியது. அந்த இரண்டு நாடுகள் ரோமானியா மாற்றும் துருக்கி ஆகும்.

அப்பொழுது துருக்கி நாட்டு அணியின் சார்பாக ஒஸ்மான் கோக்கர் தன்னுடைய 59வது வயதில் (59 வருடங்கள் மற்றும் 181 நாட்கள்) முதல் முறையாக சர்வதேச போட்டிகளில் களமிறங்கினார்.

இதன் மூலம் சர்வதேச அளவில் முதல் முறையாக, மிக அதிக வயதில் கிரிக்கெட் விளையாட களமிறங்கிய வீரர் என்கிற அடிப்படையில் ஒஸ்மான் கோக்கர் பெயர் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

11. ஜான் விஸ்டென் – ஒரே இன்னிங்சில் போல்ட் மூலம் 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்

1850 ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் வடக்கு அணியில் விளையாடிய ஜான் விஸ்டென் தெற்கு அணிக்கு எதிராக ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவர் எடுத்த பத்து விக்கெட்டுகளும் ஸ்டெம்பை பதம் பார்த்து போல்ட் செய்ததன் மூலம் கிடைத்த விக்கட்டுகள் ஆகும்.

இதன் மூலம் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை அதுவும் போல்ட் அவுட் மூலமாக எடுத்த விக்கெட்டுகள் என்கிற அடிப்படையில் ஜான் விஸ்டென் பெயர் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.