காயத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து விளையாடிய 6 கிரிக்கெட் வீரர்கள்

0
1825
Anil Kumble and Graeme Smith

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், ஒரு வீரருக்கு காயம் ஏற்ப்படுவது சகஜமான ஒன்று. போட்டியின் நடுவில் பேட்டிங் அல்லது பீல்டிங் செய்யும் வீரருக்கு காயம் ஏற்ப்பட்டால், உடனே அவரது அணியின் மருத்துவர் மைதானத்திற்குள் வந்து தேவையான சிகிச்சையை அளிப்பார். மிகப் பெரிய காயாமக இருந்தால், உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள்.

கிரிக்கெட்டின் மீது அதிக விருப்பம் கொண்ட ஒரு சில வீரர்கள் காயத்தையும் பொருட்படுத்தாது, தொடர்ந்து விளையாடுவர். தங்களது அணிக்காக இறுதிவரை போராடும் குணம் கொண்டவர்கள். அவர்களைப் பற்றி பின்வருமாறு காண்போம்.

- Advertisement -

1. ஷேன் வாட்சன்

2019 ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒப்பனர் ஷேன் வாட்சன், தனது காலில் இரத்தம் வருவது அறிந்தும் தொடர்ந்து போராடினார். வாட்சனின் காலில் இரத்தம் கசிந்ததை, யாரும் கவனிக்கவில்லை.

அடுத்த நாள், ஹர்பஜன் சிங் பதிவிட்ட டுவீட் மூலம் தான் அதை அனைவரும் அறிந்தனர். ஆனால் ஷேன் வாட்சனின் போராட்டம் வீணானது. மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. என்னதான், மும்பை அணி வெற்றி பெற்றிருந்தாலும் உலகம் முழுவதும் வாட்சனின் தியாகத்தைப் பற்றியே பேசினர்.

2. ஆனில் கும்ப்ளே

மேற்கிந்திய அணிக்கு எதிரான டெஸ்ட்டில், பேட்டிங் ஆடும் போது ஆனில் கும்ப்ளேவின் தாடை எலும்பு முறிந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட வேண்டுமென்று மருத்துவர் கூறினார்.

- Advertisement -

ஆனால், மறுநாள் கும்ப்ளே, அவரது தாடையை சுற்றி கட்டு போட்டுக் கொண்டு விளையாட சென்றார். அனைவரும் அதைக் கண்டு வியந்தனர். அன்று அவர் 14 ஓவர்களில் 5 மெய்டன்கள் வீசியதோடு பிரைன் லாராவின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

3. யுவராஜ் சிங்

Yuvraj Singh World Cup

2011 உலகக் கோப்பையில், யுவராஜ் சிங் செய்த தியாகம் மற்ற எந்த வீரரும் அவரது வாழ்நாளில் செய்ததில்லை. யுவராஜ் சிங்க்கு கேன்சர் இருப்பது அறியவந்தது. ஆனால், அதை பொருட்படுத்தாமல் அவர் இந்திய அணிக்காக விளையாடினார். மூச்சுவிட திணறிக் கொண்டு இரத்த வாந்தி எடுத்து, மிகவும் அவதிப்பட்டார்.

தொடர்ந்து விளையாடினால், இரத்த அழுத்தம் ஏற்பட்டு உயிர் இழக்க வாய்ப்பு இருக்கிறது என மருத்துவர்கள் அறிவுத்திறயும் அவர் தனது உயிரை பணயம் வைத்து விளையாடினார். இந்திய அணி உலக கோப்பை வெல்ல யுவராஜ் சிங் ஓர் முக்கிய காரணமாக இருந்தார். அவர் தொடர் நாயகன் விருது வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

4. கேரி கிர்ஸ்டன்

2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளர் இவர். கிர்ஸ்டன் தென்னாபிரிக்கா நாட்டைச் சேர்ந்தவர். ஷோயப் அக்தரின் வேகத்தைப் பற்றி உலகத்திற்கே தெரியும்.

2003ல் ஷோயப் அக்தர் வீசிய பவுன்சர், கேரி கிர்ஸ்டனின் மூக்கை உடைத்தது. இருப்பினும், கிர்ஸ்டன் தொடர்ந்து விளையாடி 46 ரன்கள் சேர்த்தார்.

5. தமிம் இக்பால்

Tamim Iqbal Injury

ஆசிய கோப்பை 2018ல் இலங்கை அணிக்கு எதிராக, தமிம் இக்பால் உடைந்த மணிக்கட்டோடு பேட்டிங் செய்தார். இடது கை பழக்கம் கொண்ட அவர், வலது கையில் பேட்டிங் செய்தார். மிகவும் அவதிப்பட்டு வந்த அவர் அடுத்தப் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்.

6. கிரெயம் ஸ்மித்

தென்னாபிரிக்கா – ஆஸ்திரேலியா இடையே 2009ல் மூன்று போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடர் நடைபெற்றது. முதல் 2 போட்டிகளில் தென்னாபிரிக்கா வென்று தொடரைக் கைப்பற்றியது. மூன்றாவது போட்டியில் ஒயிட்வாஷ் செய்யும் நோக்கத்தில் தென்னாபிரிக்காவும் ஆறுதல் வெற்றிக்காக ஆஸ்திரேலிய அணியும் வரிந்துகட்டின.

இப்போட்டியில் தென்னாபிரிக்கா வீரர், கிரெயம் ஸ்மித்தின் கை முடிந்துவிட்டது. இருப்பினும் தனது அணியின் தோல்வியை தடுக்க போராடினார். 9வது விக்கெட் வீழ்ந்த பிறகு அவர் களமிறங்கி 17 பந்துகள் ஆடி ஆட்டமிழந்தார்.