ஐபிஎல் தாண்டி வேறொரு சீரிஸில் மேட்ச்-பிக்ஸிங் செய்த இந்திய வீரருக்கு தடை விதித்த ஐசிசி!

0
152

மேட்ச்-பிக்சிங் செய்ததற்காக இந்திய வீரர்களுக்கு 14 வருடங்கள் தடை விதித்திருக்கிறது ஐசிசி.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் மெஹர் சாயாகர், விளையாட்டின் ஊழல் தடுப்பு பிரிவின் விதிமுறைகளை ஏழு பிரிவுகளின் கீழ் மீறியதற்காக 14 ஆண்டுகள் அனைத்துவித கிரிக்கெட்டிலிருந்தும் தடை செய்யப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கடந்த புதன்கிழமை அறிவித்துள்ளது.

2019 இல் ஜிம்பாப்வேயில் நடந்த ஐக்கிய அரபு அமீரகத்துடைய ஒருநாள் சர்வதேசத் தொடரில் மேட்ச்-பிக்சிங் மற்றும் அதே ஆண்டில் கனடாவில் நடந்த குளோபல் டி20 ஃபிரான்சைஸ் போட்டிகளில் மேட்ச்-பிக்சிங் செய்ய முயற்சித்ததற்காக மெஹர், ஐசிசி ஊழல் எதிர்ப்பு தீர்ப்பாயத்தால் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டார்.

“முதலில் 2018 ஆம் ஆண்டு அஜ்மானில் கிரிக்கெட் தொடரை நடத்தி அதில் மேட்ச் பிக்சிங் செய்ய பல்வேறு ஏற்பாடுகளை மெஹர் செய்து வந்தார். இது குறித்த தகவல்கள் எங்களுக்கு வந்தது. உடனடியாக கையும் களவுமாக பிடித்து விட்டோம். அப்போதுதான் முதலில் இவரை நாங்கள் சந்தித்தோம்.” என்று ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவின் பொதுச் மேலாளர் தெரிவித்தார்.

“அத்துடன் நிறுத்தாமல் பல்வேறு தொடர்களில் தனக்கு இருக்கும் பழக்கவழக்கங்களை வைத்து கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம், மேட்ச் பிக்சிங் போன்றவற்றை செய்ய தொடர்ந்து முயற்சி செய்து வந்திருக்கிறார். ஜிம்பாப்வேவில் நடந்த ஒரு தொடரிலும், அதன் பிறகு கனடாவில் நடந்த உள்ளூர் லீக் போட்டிகளிலும் செய்ய முயற்சித்திருக்கிறார். இது பற்றிய தகவல் தெரிந்ததும் மீண்டும் ஒருமுறை இவரை கையும் களவுமாக பிடித்து விசாரித்ததில் தற்போது உண்மை என்னவென்று தெரிய வந்திருக்கிறது .

இதை அவரும் ஒப்புக்கொண்டார். 7 பிரிவுகளின் கீழ் இவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையில் வழக்கமாக கொடுக்கும் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் தடை இல்லாமல், இம்முறை நீண்ட காலம் தடை விதித்தால் இதுபோன்ற தவறு செய்ய நினைப்பவர்களுக்கு படமாக அமையும். எனவே 14 வருடங்கள் இவருக்கு தடை விதிக்கிறோம். மேலும் இந்த குற்றத்திற்காக காவல்துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருகிறோம்.” என்றார்.