ஒருநாள் கிரிக்கெட் தொடர் கேன்சல்.. நெத்தியடி காரணத்தை சொன்ன கிரிக்கெட் வாரியம்!

0
624

ஆப்கானிஸ்தான் அணியுடன் நடக்கவிருந்த ஒருநாள் தொடரை ரத்து செய்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்.

வருகிற மார்ச் மாதம் ஆஸ்திரேலியா அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருந்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவும் இருந்தது.

இந்நிலையில் தற்போது இந்த கிரிக்கெட் தொடரானது நடைபெறாது ரத்து செய்யப்படுகிறது என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துவிட்டது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்,

“ஆஸ்திரேலியா அரசாங்கம் மற்றும் வாரியத்தின் பங்குதாரர்கள் உடன் நீண்ட ஆலோசனை நடத்திய பிறகு, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், மார்ச் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐசிசி சூப்பர் லீக் சுற்றின் ஒரு அங்கமாக ஆப்கானிஸ்தான் உடன் நடைபெறவிருந்த மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க முடியாது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பெண்களுக்கு மற்றும் பெண் குழந்தைகளுக்கு உரிய கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் மற்றும் பார்க், ஜிம் போன்ற பொது இடங்களுக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அதை எதிர்க்கும் விதமாக இந்த முடிவானது எடுக்கப்பட்டிருக்கிறது.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு மத்தியில் இந்த கிரிக்கெட் போட்டியை வளர்க்க வேண்டும். அதை ஆப்கானிஸ்தான் உட்பட, உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற நோக்கில் செயல்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், அந்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்றவாறு சூழலை வளர்ப்பதற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியமும் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறது.

இந்த விஷயத்தில் எங்களுக்கு ஆதரவு தெரிவித்த ஆசிரியர்களின் அரசுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.” என நீண்ட அறிக்கையை வெளியிட்டு தடைக்கு எதிர்ப்பும், அதைத்தாண்டி கிரிக்கெட்டை வளர்க்க ஆதரவும் தெரிவித்துள்ளது.

அதற்கு முன்னர், இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஆஸ்திரேலியா அணி, 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.