CPL பைனல்.. சிஎஸ்கே வீரர் மாஸ்.. பொல்லார்ட் நைட் ரைடர்ஸ் 94 ரன்களில் பொட்டலம்.. கயானா ஃபர்ஸ்ட் டைம் சாம்பியன்!

0
1062
CPL

இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருவது போல 2013ம் ஆண்டு முதல் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் கரிபியன் பிரிமியர் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த வருடம் நடைபெற்ற கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் கீரன் பொல்லார்டு தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும், இம்ரான் தாஹிர் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும் மோதிக்கொண்டன.

- Advertisement -

இந்த போட்டியில் கயானா அணி முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. நைட் ரைடர்ஸ் அணியில் பொல்லார்ட், பிராவோ, பூரன், ரசல், நரைன் என்று இருந்த தலைகள் எல்லாம் பெரிய தலைகள்தான்.

இந்த நிலையில் பேட்டிங் செய்ய வந்த நைட் ரைடர்ஸ் அணிக்கு கேசி கார்தி மட்டும் 45 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு தாக்குப் பிடித்தார். ஆனால் மற்ற யாரும் அந்த அணிக்கு பெரிய ரன்னை தரவே இல்லை. பூரன் 1, பொல்லார்ட் 0, ரசல் 3, பிராவோ 8, நரைன் 1 என சொற்ப ரன்களில் நடைபெற்றினார்கள்.

டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 18.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 94 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடு வரும் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் டிவோன் பிரிட்டோரியஸ் நான்கு ஓவர்களில் 26 ரன்கள் தந்து, நான்கு விக்கெட் கைப்பற்றினார். கடைசியில் இவரை ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- Advertisement -

அடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய கயானா அணிக்கு பாகிஸ்தானின் இளம் இடதுகை துவக்க வீரர் சயிம் அயூப் 41 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்து வெற்றியை உறுதி செய்தார்.

ஷாய் ஹோப் 32 ரன்கள் உடன் களத்தில் இருந்தார். கயானா அணி 14 ஓவர்களில் இலக்கை எட்டி, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் முறையாக கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது!

தற்பொழுது உலகம் முழுவதும் பெரிய தொடர்கள் எல்லாம் முடிவடைந்து, இந்தியாவில் நடக்க இருக்கும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை பார்ப்பதற்காக தயாராகி இருக்கின்றன. இனி அடுத்த இரண்டு மாதங்கள் ஒருநாள் கிரிக்கெட் வடிவம் மட்டுமே விளையாடப்படும்!