ரிஷப் பண்ட் நீக்கமா? இல்லை ஓய்வா? குழப்பத்தில் ரசிகர்கள்

0
191
Rishab pant

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் மட்டும் டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை இரவு நேரத்தில் பிசிசிஐ அறிவித்துள்ளது. ஒரு காலத்தில் இந்திய அணி அறிவிக்கப்பட்டால் காலையிலிருந்து மாலை நேரத்திற்குள் அறிவிப்பு வெளியாகு ம். தேர்வுக்கு குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து இந்த வீரரை ஏன் எடுத்தோம்? ஏன் நீக்கினோம் ? என்று விளக்கம் அளிப்பார்கள்.

- Advertisement -

ஆனால் தற்போது எந்த ஒரு நடைமுறையும் பின்பற்றாமல் பிசிசிஐ அணியை அறிவிப்பது ரசிகர்களை கடுப்படையை செய்துள்ளது. உதாரணத்திற்கு இந்திய அணியில் முக்கிய வீரராக கருதப்படும் ரிஷப் பண்ட் டி20, ஒருநாள் என இரண்டு அணியிலும் தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு பதிலாக ஒரு நாள் அணியில் இஷான் கிஷன் மற்றும் கே எல் ராகுல் விக்கெட் கீப்பராக அறிவிக்கப்படுகிறார்கள். இதே போன்ற டி20 அணியில் சஞ்சு சாம்சன், இசான் கிஷன் இடம் பெற்றுள்ளனர்.

இலங்கைத் தொடர் முடிந்தவுடன் இடைவெளி இன்றி நியூஸ்லாந்து தொடர் நடைபெறுவதால் ரிஷபண்ட்டிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறதா? இல்லை அவர் வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் சரிவர விளையாடததால் நீக்கப்பட்டிருக்கிறாரா? இல்லை பண்ட்க்கு காயம் அடைந்திருக்கிறாரா என்று ஒரு விளக்கத்தையும் பிசிசிஐ தெரிவிக்காமல் நடவடிக்கை எடுத்திருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இதேபோன்று இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான் ஒருநாள் அணியில் இடம்பெறவில்லை. இனி அவர் பங்கேற்க மாட்டாரா இல்லை காயமடைந்திருக்கிறாரா? இல்லை ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்தும் பிசிசிஐ விளக்கம் அளிக்கவில்லை. இதை போன்று இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்த கே எல் ராகுல் அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதிலாக டி20 போட்டியில் சூரியகுமாராகவும் ஒரு நாள் போட்டியில் ஹர்டிக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது குறித்து எந்த விளக்கத்தையும் பிசிசிஐ அளிக்கவில்லை.

- Advertisement -