உம்ரான் மாலிக் சாதனையில் குழப்பத்தை ஏற்படுத்திய வர்ணனையாளர்கள்! – வீடியோ லிங்க்!

0
2345

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான முதலாவது ஒருநாள் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று நடைபெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 373 ரன்களை குவித்தது.374 ரன்கள் என்ற பெரிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 306 ரன்கள் மட்டுமே பெற்று 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது .

இந்திய அணியின் சார்பில் விராட் கோலி சிறப்பாக ஆடி தனது 45 வது சதத்தை பூர்த்தி செய்தார் . இலங்கை அணிக்காக கேப்டன் சனக்கா அபாரமாக அடி 108 ரன்கள் எடுத்தார். விராட் கோலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார் . இந்திய அணியின் பந்துவீச்சில் இளம் வேகப் பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் 57 ரன்களை கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார் .

பங்களாதேஷ் அணியுடன் தொடரில் இருந்து இந்தியா அணிக்காக சிறப்பாக பந்து வீசி வருகிறார் உம்ரான் மாலிக். இலங்கை அணி உடன் நடைபெற்ற மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரிலும் ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . நேற்றைய போட்டியிலும் சிறப்பாக பந்து வீசி அவர் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார் .

நேற்றைய போட்டியில் அவர் செய்த ஒரு சாதனை வர்ணனையாளர்களின் குழப்பத்தினால் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா என்று தெரியவில்லை . ஆட்டத்திற்கான 14வது ஓவரையும் தனக்கான முதல் ஓவரையும் வீச வந்தார் உம்ரான் மாலிக். இந்த ஓவரின் நான்காவது பந்தை அவர் மணிக்கு 156 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினார்.

இதன் மூலம் அவர் தனது முந்தைய சாதனையான மணிக்கு 155 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியதை முறியடித்து இருந்தார் . ஆனால் இந்தப் போட்டியின் ஆங்கில ஒளிபரப்பில் ஒரு வேகமும் இந்தி ஒளிபரப்பில் மற்றொரு வேகத்தையும் ஸ்பீடு கன் காட்டியதால் இதனைப் பற்றிய குழப்பம் ஏற்பட்டுள்ளது . இதன் மூலம் இந்த சாதனையானது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா என்று தெரியவில்லை .

ஆரம்ப காலகட்டத்தில் தன்னுடைய வேகத்தை மட்டுமே வைத்துக் கொண்டு அதிக ரண்களை வழங்கிய உம்ரான் தற்போது லைன் அண்ட் லென்த் மற்றும் ஸ்விங் என பந்து வீச்சில் பல வெரைட்டிகளை காட்டி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்துவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . இந்தப் பந்து வீச்சின் வீடியோவும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.