போட்டிக்கு முன்ன பயிற்சியில் இரண்டு முறை கிளீன் போல்ட் ஆனேன் – இஷான் கிஷான் சிறப்பு பேட்டி!

0
1270
Ishankishan

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 14ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகளை பெறுவதற்கு இந்த டெஸ்ட் போட்டி தொடர இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது .

இந்திய டெஸ்ட் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் வங்கதேசம் சென்று இந்திய ஒரு நாள் அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர் . இந்நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை தோற்கடித்து பெரும் வெற்றி பெற்றது . இந்திய அணியின் இளம் வீரர் ரிசான் கிசான் அபாரமாக ஆடி இரட்டை சதம் அடித்தார் .

- Advertisement -

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் மிக வேகமாக அடிக்கப்பட்ட இரட்டை சதம் இதுவாகும் . 126 பந்துகளில் தனது 200 ரண்களைக் கடந்த கிஷான் கிரிஷ் கெயிலின் சாதனையை முறியடித்தார் . இதற்கு முன் கிரிஸ் கெயில் 2015 ஆம் வருட உலக கோப்பையின் போது ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 138 பந்துகளில் 200 ரண்களைக் கடந்தது சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது .

இந்தப் போட்டிக்கு பின்னர் பி சி சி ஐ டிவி காக இசான் கிசானை இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரர் சுப்மன் கில் பேட்டி எடுத்தார் . இந்த பேட்டியானது நகைச்சுவை ஒன்றாக அமைந்தது ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது .

இந்த பேட்டியின் போது சுப்மன் கில் “நீங்கள் ஏன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வலை பயிற்சிக்கு வரவில்லை? என்று கேள்வி எழுப்பினார்” அதற்கு பதில் அளித்த “இசான் கிசான் நான் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சியின் போது வந்தேன் ஆனால் நீங்கள் தான் என்னை பார்க்க வில்லை என்று கூறினார் . மேலும் வலை பயிற்சியின் போது நான் இரண்டு முறை கிளீன் பவுல்ட் ஆனதாக” தெரிவித்தார் .

- Advertisement -

மேலும் நான் இரட்டை சதம் அடித்தது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம் என்றும் இந்த இரட்டை சனத்தின் மூலம் நான் கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், விரேந்தர் சேவாக் . ரோகித் சர்மா , க்ரிஷ் கெய்ல் ஆகியோருடன் இந்த சாதனை பட்டியலில் என்னுடைய பெயரும் இணைந்தது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று” என்று தெரிவித்தார் .

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் முடிவடைந்த நிலையில் டெஸ்ட் போட்டிகள் வரும் 14ஆம் தேதி முதல் துவங்க உள்ளன . இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமான வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் . சமீப காலமாக இந்தியா அணியின் ஒருநாள் போட்டிகளில் இடம் பெற்ற சுப்மன் கில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கே எல் ராகுல் போன்ற வீரர்கள் அணிக்கு திரும்பியதால் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .