ஏபி டிவிலியர்ஸ் இடத்தில் இருந்து அவரது பணியை இந்த வீரர் சிறப்பாகச் செய்வார் – கிறிஸ் மோரிஸ் நம்பிக்கை

0
703
Ab de Villiers and Chris Morris

தென் ஆப்பிரிக்க வீரரான ஃபேப் டு பிளேசிஸ் 100 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இதுவரை மொத்தமாக 2935 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 34.94 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 131.09 ஆகும்.

2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரை சென்னை அணியில் விளையாடி பின்னர் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டில் புனே அணியில் இடம்பெற்று விளையாடினார். பின்னர் மீண்டும் 2018ஆம் ஆண்டு சென்னை அணி மூலமாக கைப்பற்றப்பட்டு கடந்த ஆண்டுவரை சென்னை அணியில் விளையாடினார்.

- Advertisement -

சென்னை அணிக்காக பல போட்டிகளில் மிக அற்புதமாக பேட்டிங் செய்வது மற்றும் அதைவிட அற்புதமாக ஃபீல்டிங் செய்வது என ஒரு ஆஸ்தான வீரராக இதுவரை அவர் விளையாடி வந்தார். குறிப்பாக கடந்த ஆண்டு கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் மொத்தமாக 633 ரன்கள் குவித்து சென்னை அணி கோப்பையை வெல்ல மிக முக்கிய காரணமாக விளங்கினார்.

மீண்டும் சென்னை அணியில் இந்த ஆண்டு அவர் நிச்சயமாக விளையாடுவார் என்று சென்னை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், பெங்களூர் அணி அவரை 7 கோடி ரூபாய்க்கு இன்று கைப்பற்றியது.

பெங்களூரு அணியில் ஏபிடி செய்த பணியை ஃபேப் டு பிளேசிஸ் செய்வார்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி என்று சொன்னாலே அந்த அணியின் இரண்டு கண்களாக பார்க்கப்படுவது விராட் கோலி மற்றும் ஏபி டிவிலியர்ஸ் மட்டுமே. அவர்கள் இருவரும் இணைந்து பெங்களூரு அணியை பல சமயத்தில் தோல்வியின் இருந்து காப்பாற்றி இருக்கிறார்கள்.

- Advertisement -

ஏபி டிவிலியர்ஸ் அனைத்துவித சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவரை இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட போவதில்லை என்று முன்கூட்டியே கூறியிருந்தார். அவரது இடத்தை நிரப்ப பெங்களூரு அணி நிர்வாகம் தற்போது ஃபேப் டு பிளேசிஸ்சை தேர்வு செய்துள்ளது.

ஏபி டிவிலியர்ஸ் போன்ற மிக அற்புதமாக அதிரடியாக பேட்டிங் செய்வது மற்றும் ஃபீல்டிங் செய்வது என அனைத்து ரீதியிலும் பேக் டு பிளசிஸ் சளைத்தவர் கிடையாது. தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளரான கிறிஸ் மோரிஸ் “ஆர்சிபி அணியில் ஏபி டிவில்லியர்ஸ் செய்த பணியை தற்பொழுது ஃபேப் டு பிளேசிஸ் இந்த ஆண்டு முதல் செய்யப்போகிறார்” என்று கூறியுள்ளார்.

ஃபேப் டு பிளேசிஸ் தங்கள் அணிக்கு கிடைத்ததை அந்த அணி ரசிகர்களை மிகவும் உற்சாகமாக சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.