ஐபிஎல்-இல் கிரிஸ் கெயில் அடித்த 175 ரன்கள் ரெக்கார்டை, யாரால் உடைக்க முடியும்? – இந்தவொரு இந்திய வீரரால் முடியும், கிரிஸ் கெயில் சொன்ன பதில்!

0
2846

கிரிஸ் கெயில் 2013 ஆம் ஆண்டு அடித்த 175 ரன்கள் ரெக்கார்டை யாரால் முறியடிக்க முடியும்? என்று அவரிடமே கேட்கப்பட்டதற்கு, இந்திய வீரரை குறிப்பிட்டு பதில் கூறியுள்ளார் கிரிஸ் கெயில்.

யுனிவர்சல் பாஸ் என்று அழைக்கப்பட்டு வரும் கிரிஸ் கெயில், டி20 உலகில் எண்ணற்ற பல சாதனைகளை படைத்திருக்கிறார். அவற்றில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது 2013-ஆம் ஆண்டு புனை வாரியர்ஸ் அணிக்கு எதிராக 66 பந்துகளில் 175 ரன்கள் அடித்தது ஆகும்.

- Advertisement -

எவராலும் அதை முறியடிக்க முடியாது என்று பார்க்கப்படும் ஒரு சாதனையாக இருக்கிறது. அந்த போட்டியில் 30 பந்துகளில் சதம் அடித்தார். இதுதான் தற்போது வரை அதிரடியாக குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட ஐபிஎல் சதமாக இருக்கிறது.

அந்த இன்னிங்சில் ஒட்டுமொத்தமாக 15 பவுண்டரிகள் மற்றும் 17 சிக்சர்கள் உட்பட 175 ரன்கள் விளாசினார். தற்போது வரை இதுதான் ஐபிஎல் இல் ஒரு இன்னிங்ஸில் தனி மனிதனால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆக இருக்கிறது.

இந்நிலையில் தனது சமீபத்திய பேட்டியில் இந்த 175 ரன்கள் சாதனையை எவரால் முறியடிக்க முடியும்? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு சிறப்பான பதிலை கொடுத்திருக்கிறார் கிரிஸ் கெயில். ஜியோ சினிமா நிகழ்ச்சிக்கு அவர் கொடுத்த பேட்டியில் கூறியதாவது,

- Advertisement -

“ஐபிஎல் இல் என்னால் மறக்க முடியாத ஒரு நிகழ்வு என்னவென்றால், நான் வைத்த ரெக்கார்ட்.. 175 ரன்கள் சாதனையை நான் கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். இது எப்போதும் கவனிக்கப்பட கூடிய ஒன்றாக இருக்கும். நம்பர் ஒன் இடத்திலும் இருக்க்கும்.” என்றார்.

மேலும் இந்த ரெக்கார்டை யார் முறியடிக்க வாய்ப்புகள் இருக்கிறது? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, சந்தேகத்திற்கு இடமின்றி, “கேஎல் ராகுல்” என்று குறிப்பிட்டார்.

கெயில் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் கிட்டத்தட்ட மூன்று சீசன்களாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஒன்றாக விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் அணிலும் இவர்கள் விளையாடியுள்ளார்கள்.