இங்கிலாந்தின் கவுண்டி தொடரில் இந்த அணிக்காக களமிறங்கவுள்ள புஜாரா

0
83
Cheteshwar Pujara County Cricket Championship

2012 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டியில் புஜாரா மிக சிறப்பாக விளையாடினார். இந்த காலகட்டத்தில் அவருடைய டெஸ்ட் பேட்டிங் ஆவெரேஜ் அபாரமாக இருந்தது. ஆனால் 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவருடைய டெஸ்ட் அவரைச் சற்று சுமாராகவே இருந்து வருகிறது. இவரும் ரஹானேவும் டெஸ்ட் போட்டிகளில் கடந்த சில ஆண்டுகளில் சரியாக விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டும் அனைத்து ரசிகர்கள் மத்தியில் முன்னெடுத்து வைக்கப்பட்டது.

குறிப்பாக புஜாரா 2020 முதல் தற்போது வரை டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம் கூட குவிக்கவில்லை. இந்த ஆண்டு துவக்கத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். இந்த ஆண்டு மீண்டும் அவர் தன்னுடைய பழைய ஃபார்முக்கு வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். இருப்பினும் அந்த இரண்டு டெஸ்ட் போட்டியிலும் எந்தவித அரைசதமும் அடிக்காமல் 108 ரன்கள் மட்டுமே குவித்தார்.

- Advertisement -

இவரது ஆட்டம் சரியாக இல்லாத காரணத்தினால் பிசிசிஐ இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவரை டெஸ்ட் அணிக்கு தேர்ந்தெடுக்கவில்லை. ரஹானேவும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புறக்கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கவுண்டி தொடரில் களமிறங்கும் புஜாரா

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றதால் கடந்த ஆண்டு கவுண்டி தொடரில் புஜாரா விளையாடவில்லை. ஆனால் தற்பொழுது இந்திய அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை அதேபோல ஐபிஎல் தொடரிலும் அவரை எந்த அணியும் கைபற்றவில்லை.

இந்நிலையில் சஸ்செக்ஸ் அணி ஆஸ்திரேலிய வீரர் டிரவிஸ் ஹெட்டுக்கு மாற்று வீரராக புஜாராவை ஒப்பந்தம் செய்துள்ளது. அதற்கு புஜாராவும் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி புஜாரா கவுண்டி தொடர் மற்றும் ராயல் ஒன் டே கோப்பை தொடரிலும் இந்த ஆண்டு பங்கேற்க போகிறார். ஏறக்குறைய நிறைய நாட்கள் இங்கிலாந்தில் புஜாரா இந்த ஆண்டு விளையாடப் போகிறார்.

- Advertisement -

இது சம்பந்தமாக பேசியுள்ள புஜாரா “கவுண்டி தொடரில் வரலாற்றுச் சிறப்புமிக்க அணியான சஸ்செக்ஸ் அணியில் விளையாட போவது மிகவும் பெருமையான விஷயம். கூடிய விரைவில் அந்த அணியில் இணைந்து விளையாட ஆர்வமாக இருக்கிறேன். இங்கிலாந்தில் விளையாடுவது எனக்கு எப்போதும் பிடிக்கும், அங்கே நான் சந்தோசமாக கிரிக்கெட் விளையாடுவேன் என்றும் கூறியுள்ளார். மேலும் சஸ்செக்ஸ் அணியின் வெற்றிக்கு ஏற்றவாறு என்னுடைய பங்களிப்பு முழுவதுமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

புஜாரா சமீபத்தில் 2021-2022 இரஞ்சி டிராபி தொடரின் லீக் போட்டியில், மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு அரை சதங்கள் உட்பட 191 ரன்கள் குவித்தார். ஆனால் எதிர்பாராவிதமாக நாக் அவுட் சுற்றுக்கு அந்த அணி தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.