நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது.
இந்த சூழ்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் ஜெயக்குவாட் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. சிஎஸ்கேவில் அதிகபட்சமாக கார்த்திக் சர்மா 42 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். இந்த ஆடுகளத்தில் சிஎஸ்கே வெற்றி பெறுவதற்கு போதுமான ரணாக இருக்கும் என்று நினைக்கப்பட்டது.
ஆனால் லக்னோ அணியின் தொடக்க வீரர் மிச்சல் மார்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிஎஸ்கே அணியின் வெற்றி வாய்ப்பை பறித்தார். 38 பந்துகளில் 90 ரன்கள் குவித்து லக்னோ அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதனால் சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு செல்வது தற்போது சிக்கலாகி இருக்கிறது. இந்த சூழ்நிலைகள் இந்த தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது “இந்த ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏதோ ஒன்று சாதகமாக இருப்பதை உணர்ந்தேன். எனவே நாங்கள் ஹார்ட் லெந்த்தில் பந்துகளை வீச முயற்சித்தோம். ஆனால் அது எங்களுக்கு கை கூடாமல் போனது. இந்த ஆடுகளத்தில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்த போது 160 முதல் 170 ரன்கள் வரை சிறப்பாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை விட 180 ரன்கள் இலக்கை நிர்ணயத்தோம்.
ஆனால் அவர்களது பேட்டிங் பொருத்தவரை மிகச் சிறப்பாக விளையாடி விட்டார்கள். ஒரு சில அசாதாரணமான ஷாட்கள் மிச்சல் மார்ஸ் அடிக்கும்போது என்னால் நம்ப முடியவில்லை. இந்த ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டிக்குரிய லைன் அண்ட் லென்த்தில் பந்து வீச முயற்சித்தோம். ஆனால் அது எங்களுக்கு கை கொடுக்காமல் போனதே தோல்விக்கு முக்கிய காரணம்” என்று பேசியிருக்கிறார்.