இசான் கிசானுக்கு குவியும் வீரர்களின் வாழ்த்துக்கள்- முழு விபரம் உள்ளே!

0
358
Ishankishan

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது இதில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது . இந்திய அணிக்காக இசான் கிசான் மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர் .

அதிலும் குறிப்பாக இசான் கிசான் அபாரமாக ஆடி இரட்டை சதம் அடித்தார். இது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அடிக்கப்பட்ட அதிவேக இரட்டை சதம் ஆகும் . மிக இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரகம் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது .

இது தொடர்பாக முன்னாள் வீரர்கள் பலரும் இசான் கிஷானின் அபார ஆட்டத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர் . இந்தத் தொடரில் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பிலேயே தனத்துக்கு ஒரு நாள் கிரிக்கெட் காரியாரின் முதல் சதத்தையும் பதிவு செய்து அதை இரட்டை சுகமாக மாற்றினார் இஷான் கிஷான் . இந்த சூறாவளி சத்தத்தில் 24 பௌண்டரிகளும் 10 சிக்ஸர்களும் அடக்கம் .

இந்த சதத்தால் இந்திய ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சிகர்களும் முன்னாள் வீரர்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் . அவர்கள் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இஷான் கிஷானுக்கு தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் .

இது தொடர்பாக இந்தியா அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் இஷான் கிசானை புகழ்ந்து வீட் செய்துள்ளார் ” இது ஒரு அசாத்தியமான இரட்டை சதம் இந்த சதமானது இரட்டைப் பாராட்டுகளுக்கு உரியது”என்று தனது மகிழ்ச்சியை பகிர்ந்து உள்ளார்.

தேசிய கிரிக்கெட் அகாடமி இன் பயிற்சியாளரும் இந்தியாவின் முன்னாள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுமான வி.வி .எஸ் லக்ஷ்மன் ” அதிரடி ஆட்டத்தின் மிகச் சிறந்த கண்காட்சி” . என்று பாராட்டியுள்ள அவர் எந்த வடிவ போட்டிகளிலும் இரட்டை சதம் அடிப்பது என்பது சிறப்பான ஒன்று, அதுவும் 35 ஓவருக்குள் அடிப்பது அற்புதமான ஒன்று என்ன ஒரு திறமையான வீரர் இஷான் கிஷான் இன்று பதிவிட்டுள்ளார் .

இப்படித்தான் ஆட வேண்டும் இது போன்ற ஆட்ட அணுகுமுறை தான் இந்திய அணிக்கு நல்ல முன்னேற்றங்களை பெற்று தரும் மிகவும் அருமையாக விளையாட்டினார் இஷான் கிஷான் என்று இந்திய அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரர் வீரேந்தர் ஷேவாக் பாராட்டியுள்ளார் .

இஷான் கிசானின் ஆட்டத்தை பாராட்டி பதிவிட்டுள்ள இந்திய அணியின் சுழற் பந்து ஜாம்பவான் ஹர்பஜன் சிங் ” சாம்பியன் போன்ற ஒரு ஆட்டம் இது . இஷான் கிஷான் நீ ஒரு சாம்பியன் என்று தெரிவித்துள்ளார்.

தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ள இந்திய அணியின் ஸ்டார் ஆல்ரவுண்டர் ஹரிதிக் பாண்டியா “சிறப்பான ஆட்டம் உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் என்று பதிவிட்டுள்ளார் .

ஒரு இளைஞரின் உற்சாகமான மற்றும் சிறப்பான ஆட்டம் என பாராட்டியுள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஒரு காளையை அதன் திமிலை பிடித்து அடக்குவது போல் தனதுக்கு கிடைத்த வாய்ப்பை இப்படித்தான் தம் வசமாகி கொள்ள வேண்டும் மிகச் சிறந்த ஒரு இன்னிங்ஸ் என்று இஷான் கிசானை பாராட்டியுள்ளார் .

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா ” இது ஒரு மிகச் சிறப்பான மற்றும் அற்புதமான ஆட்டம் உன்னை தவிர யாராலும் இது போல ஆட முடியாது என்று இசான் கிசாணை பாராட்டியுள்ளார்

இந்திய டி20 அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் இது ஒரு ராவான அதிரடி ஆட்டம் என்று பதிவிட்டுள்ளார்.

உலகப் புகழ்பெற்ற ஆங்கில வர்ணனையாளரான ஹர்ஷா போகலே உலகின் அதிவேக இரட்டை சதம் இது சாட்டோக்ராம் நகரை தனது இரட்டை சதத்தால் ஒளி வெள்ளம் ஆக்கியுள்ள இஷான் கிசான் என்று பாராட்டியுள்ளார்.