சூப்பர் 4: இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இந்த இந்திய வீரருக்கு இடம் கொடுக்காதீர்கள் – முன்னாள் பாகிஸ்தான் வீரர் கருத்து!

0
129

இந்தியா பாகிஸ்தான் போட்டியில் இந்த இந்திய வீரருக்கு இடம் கொடுக்காதீர்கள் என்று முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா கருத்து தெரிவித்துள்ளார்

ஆசிய கோப்பை தொடரில் குரூப் பி-ல் ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் குரூப் ஏ-ல் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இந்தியா தனது முதலில் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் ஹாங்காங் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியை தழுவினாலும், இரண்டாவது போட்டியில் ஹாங்காங் அணியை எதிர்கொண்டு 155 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

- Advertisement -

வருகிற ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் சூப்பர் 4 சுற்றில் மோதுகின்றன. சூப்பர் 4 சுற்றில் இந்திய அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சகல் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக இளம் சுழல் பந்துவீச்சாளர் ரவி பிஸ்னாய் உள்ளே எடுத்துவரப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா கருத்து தெரிவித்திருக்கிறார்.

“துபாய் மைதானத்தில் விளையாடிய போட்டியில் யுசுவேந்திர சகல் பந்தை ரிலீஸ் செய்த விதம் திருப்தி அளிக்கவில்லை. குறிப்பாக ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் அவரது பந்துவீச்சு பெரிதளவில் தாக்கம் ஏற்படுத்தவில்லை. கூக்ளி மற்றும் ரிஸ்ட் ஸ்பின் இரண்டும் சரியாக அமையவில்லை. ஆகையால் சூப்பர் 4 சுற்றில் இளம் சுழல் பந்துவீச்சாளர் ரவி பிஸ்னாய் உள்ளே எடுத்துவரப்பட வேண்டும். அவர் நல்ல பார்மில் இருக்கிறார். சூப்பர் 4 சுற்று அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். அழுத்தம் நிறைந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அடுத்தடுத்த தொடர்களுக்கு முக்கியமானதாக அமையும்.” என்று கருத்து தெரிவித்தார்.

லீக் போட்டிகளில் சகல் ரன்களை நன்றாக கட்டுப்படுத்தினார். விக்கெட் எடுக்க வில்லை என்றாலும் மிடில் ஓவர்களை நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினார். ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் வீசிய நான்கு ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே சகல் விட்டுக் கொடுத்தார். இவரது எக்கனாமி மிகக் குறைவாக இருக்கிறது. நல்ல பார்மில் இருந்து வரும் சகல் குறித்து டேனிஸ் கனேரியா தெரிவித்த கருத்து கலவையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

- Advertisement -

ஆசிய கோப்பை தொடர் தற்போது சூப்பர் 4 சுற்றுக்கு நகர்ந்திருக்கிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை இரு அணிகளும் இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த சூப்பர் 4 சுற்றில் மொத்தம் ஆறு போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. இந்த ஆறு போட்டிகள் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதிப் போட்டியில் பங்கேற்கும்.