இஷான் கிசானின் கேட்ச்; நம்ப முடியாமல் சிரித்த ஹர்திக் பாண்டியா- வீடியோ உள்ளே!

0
1663
Ishankishan

இந்திய அணி தனது உள்நாட்டில் இலங்கை அணி எதிர்த்து தலா மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது!

இதில் முதலில் நடைபெறும் டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஒரு நாள் போட்டி அணிக்கு ரோகித் சர்மா வழக்கம் போல் கேப்டனாக இருக்கிறார்!

டி20 அணி அறிவிப்பில் மூத்த வீரர்களான விராட் கோலி ரோஹித் சர்மா கேஎல் ராகுல் புவனேஸ்வர் குமார் ஆகியோர் இடம்பெறவில்லை. இளம் வீரர்களான இசான் கிசான், சுப்மன் கில், சஞ்சு சாம்சன், உம்ரான் மாலிக் மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள்.

இன்று டி20 தொடரின் முதல் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக இடம்பெற்ற இசான் கிசானின் பேட்டிங் நன்றாகவே இருந்தது. அவர் பேட்டிங்கில் 37 ரன்கள் எடுத்தார்.

அதே சமயத்தில் விக்கெட் கீப்பிங் இன்று அவரது செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது. உம்ரான் மாலிக் ராஜபக்சேவுக்கு பந்தைக் கொஞ்சம் ஷார்ட் லென்தில் வீச, அதை அவர் தூக்கி அடித்து எட்ஜ் எடுத்து, டீப் ஃபைன் லெக் திசையில் உயரே கிளம்பியது. அப்போது அந்தப் பந்தை மிக எளிதாக பிடிக்கும் வகையில் ஹர்சல் பட்டேல் இருந்தார்.

ஆனால் விக்கெட் கீப்பர் இசான் கிசான் அவரை பந்துக்கு வர வேண்டாம் என்று முன்கூட்டியே தெரிவித்து விட்டு, தன் இடத்திலிருந்து அவரது இடத்திற்கு ஓடி சென்று, கண்களுக்கு பின்புறமாக இருந்து வரும் பந்தை, மிகச்சரியாக கணித்து, அற்புதமாக பிடித்து விக்கட்டை வாங்கினார். மகேந்திர சிங் தோனியின் விக்கெட் கீப்பிங்கை பார்ப்பது போலவே இருந்தது.

நடந்த எல்லாவற்றையும் பார்த்த கேப்டன் ஹரிதிக் பாண்டியா, அதை நம்ப முடியாமல் விக்கெட் கிடைத்த மகிழ்ச்சியில் வானத்தைப் பார்த்து சிரித்து அதை ஏற்றுக்கொண்டார். இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!