அஸ்வினை ஆட வைக்க எவ்வளவோ முயன்று பார்த்தோம், ஆனால் இந்த காரணத்தால் முடியவில்லை – கேப்டன் விராட் கோலி

0
730
Ashwin and Kohli

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆடி வருகிறது முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-0 என இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்ற அதே வேகத்தோடு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆட லீட்ஸ் மைதானத்திற்கு இந்திய அணி வந்துள்ளது.

இதுவரை ஒரு முறை கூட இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் டாஸ் வெல்லாத இந்திய கேப்டன் விராட் கோலி இந்த முறை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இந்த மைதானம் இந்திய அணிக்கு மிகவும் ராசியான மைதானம். இந்த மைதானத்தில் நடந்த கடந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வென்றுள்ளது. அதே போல இந்த முறையும் சிறப்பாக விளையாடி ஆட்டத்தில் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் நினைத்தபோது, முதல் ஐந்து ஓவர்களுக்குள்ளேயே ராகுல் மற்றும் புஜாரா என இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது. கடந்த போட்டியில் சதம் கடந்த கேஎல் ராகுல் இந்த முறை ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறியது பெருத்த அதிர்ச்சியை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.

Ashwin Test Cricket

ஏற்கனவே அணியில் புஜாரா வின் இடம் கேள்விக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் புஜாரா மீண்டும் மோசமாக செயல்பட்டது ரசிகர்களிடம் பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. இதைவிட, இந்திய அணியின் சுழல்பந்து வீச்சின் முக்கிய வீரராக விளங்கிவரும் ரவிச்சந்திரன் அஸ்வினை அணியில் சேர்க்காமல் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக விராட் கோலி மீது ஒரு விமர்சனம் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த ஆட்டத்திலாவது அஷ்வின் ஆடுவார் என்று பலரும் நினைத்த போது இந்த ஆட்டத்திலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அஸ்வின் ஏன் ஆடவில்லை என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, “அஸ்வினை ஆட வைக்க வேண்டும் என்று நாங்களும் நினைத்தோம். ஆனால் கூடுதல் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் ஆடுவது அணிக்கு மிகவும் முக்கியமாக இருக்கிறது. கடந்த ஆட்டத்தில்ல் கூடுதல் வேகப்பந்துவீச்சாளர் இருப்பது எவ்வளவு நன்மை என்பது நன்றாக புரிந்தது. கடந்த ஆட்டத்தை விட இந்த முறை ஜடேஜா அதிக ஓவர்கள் வீசி வேண்டியது வரும்” என்று விராட் கோலி கூறினார்.