டிரென்ட் போல்டின் சவாலான பேச்சுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ள இந்திய கேப்டன் விராட் கோலி

0
158
Virat Kohli and Trent Boult

நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக கோப்பை டி20 தொடரில் குரூப் பி அணியில் பாகிஸ்தான் 3 தொடர் வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை மிக எளிதில் வீழ்த்தி, தோல்வி கண்டிராத அணியாக வலம் வலம் வந்து கொண்டிருக்கிறது. மறுபுறம் அந்த அணியிடம் விளையாடி தோல்வி கண்ட இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை இரவு போட்டி நடைபெற இருக்கிறது.

முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி கண்ட இந்த இரு அணிகள் நாளை நடைபெறவுள்ள போட்டியில் நிச்சயமாக வெற்றியை எதிர்நோக்கி விளையாடும் என்று நாம் எதிர்பார்க்கலாம். நாளை நடைபெறும் ஆட்டத்தில் தோல்வி பெறும் அணி மிகப் பெரிய நெருக்கடிக்கு ஆளாக நேரிடும். எனவே முடிந்தவரை நாளைய போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பினை தக்கவைத்துக்கொள்ளவே இந்த இரண்டு அணிகளும் விரும்பும்.

பாகிஸ்தான் அணியில் ஷஹீன் அப்படி செய்த மாயாஜாலத்தை நான் செய்வேன்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி பந்துவீச்சாளர்களிடம் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மிகப்பெரிய அளவில் திணறினார்கள். குறிப்பாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோகித் சர்மா, கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோரின் விக்கெட்டுகளை தனியாளாக கைப்பற்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய விதத்தை தற்பொழுது நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் முன்னெடுத்து பேசியுள்ளார். ஷஹீன் அப்ரிடி எப்படி இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை கைப்பற்றினாரோ, அதேபோல நாளை நடைபெற இருக்கும் ஆட்டத்தில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை நான் கைப்பற்றுவேன் என்று சவால் விடுத்துள்ளார். இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நாளை மீண்டும் திணற போகிறார்கள் என்பது போல டிரென்ட் போல்ட் சவால் விடுத்துள்ளார்.

டிரென்ட் போல்ட் சவாலுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ள விராட் கோலி

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை கைப்பற்றும் நோக்கத்தில் நாளை அவர் விளையாட நேரிட்டால், அவருக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் நாளை நாங்கள் விளையாடுவோம். அவருடைய நோக்கம் எங்களுடைய விக்கெட்டுகளை கைப்பற்றுவது என்றால், எங்களுடைய நோக்கம் அவருக்கு எதிராக எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதே.

நியூசிலாந்து அணிக்கு எதிராக நிறைய போட்டிகளில் விளையாடிய அனுபவம் எங்களுக்கு உள்ளது. குறிப்பாக அவருடைய பந்து வீச்சுக்கு எதிராக நிறைய போட்டிகளில் நாங்கள் விளையாடி இருக்கிறோம். எனவே நாளை அவருடைய பந்து வீச்சுக்கு எதிராக விளையாடுவதில் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அவருடைய சவாலுக்கு நாங்கள் தயார் என்றும் விராட் கோலி தக்க பதிலடியை டிரென்ட் போல்ட்டிற்கு கொடுத்துள்ளார்.