இந்திய கிரிக்கெட்

இந்தியா WTC ஃபைனலுக்கு போகுமா.. எது திருப்புமுனை.? கேப்டன் ஷுப்மன் கில் கொடுத்த பதில்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) ஃபைனலுக்கான இந்திய அணியின் பயணம் தற்போது சவாலான நிலையில் உள்ளது. இருந்தாலும், இந்திய அணி இன்னும் தனது நம்பிக்கையை இழக்கவில்லை. கேப்டன் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு ஃபைனலுக்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் உள்ளது.

- Advertisement -


இந்திய அணி அடுத்ததாக நவம்பரில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. வெளிநாட்டு மண்ணில் நடைபெறும் இந்த தொடர் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதன்பிறகு சொந்த மண்ணில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரும் இந்தியாவின் WTC பயணத்தில் முக்கிய பங்கு வகிக்க உள்ளது. எனவே, அடுத்தடுத்த தொடர்களில் நல்ல முடிவுகளை பெறுவதே இந்திய அணியின் பிரதான நோக்கமாக இருக்கும்.


இது குறித்து ஷுப்மன் கில் கூறுகையில், “நவம்பரில் நாங்கள் நியூசிலாந்துக்கு செல்கிறோம். அது எங்களுக்கு ஒரு நல்ல தொடராக இருக்கும். அதன்பின் சொந்த மண்ணில் ஒரு நல்ல தொடர் உள்ளது. நியூசிலாந்து தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டால், எங்களுக்கு வாய்ப்பு இருக்கும் வரை நாங்கள் எப்போதும் நம்பிக்கையுடன் இருப்போம். நிச்சயம் WTC ஃபைனலுக்கு முன்னேறுவோம் என்று நம்புகிறோம்” என்றார். சமீபத்தில் நடைபெற்ற முடிந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by