2172 நாட்கள்.. ரோகித் சர்மா முக்கிய முடிவு.. ஓபனர் யார்?.. வெளிப்படையான அறிவிப்பு.. 2வது டெஸ்ட்

0
496
Rohit

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரராக யார் வருவார்கள் என்பது குறித்து கேப்டன் ரோகித் சர்மா வெளிப்படையாக பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலைடு ஓவல் மைதானத்தில் நாளை துவங்க இருக்கிறது. பகல் இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறும் இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் யார்? என்பதில் ஒரு பெரிய சந்தேகம் இருந்து வந்தது. தற்பொழுது ரோகித் சர்மா இதை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்.

- Advertisement -

இரண்டு முக்கிய மாற்றங்கள்

முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா தனிப்பட்ட காரணத்தால் விளையாடாததாலும், மூன்றாவது இடத்தில் விளையாடும் இளம் வீரர் சுப்மன் கில் பயிற்சியின்போது கை விரலில் காயம் அடைந்த காரணத்தினால் விளையாடாததாலும் படிக்கல் மற்றும் துருவ் ஜுரல் இருவரும் வாய்ப்பு பெற்றார்கள்.

மேலும் கேஎல்.ராகுல் துவக்க வீரராக உயர்த்தப்பட்டார். இந்த நிலையில் கேப்டன் மற்றும் துவக்க வீரர் ரோகித் சர்மா, சுப்மன் கில் இருவரும் அணிக்கு திரும்புவதால், இந்திய பேட்டிங் வரிசையில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும்? என எதிர்பார்ப்புகள் நிலவியது. மேலும் கேஎல்.ராகுலை துவக்க இடத்தில் இருந்து நீக்க கூடாது என நிறைய ஆதரவு குரல்களும் எழுந்தது.

- Advertisement -

இந்திய அணியின் பேட்டிங் வரிசை இதுதான்

இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கேப்டன் ரோகித் சர்மா “நான் வீட்டில் இருந்து பிறந்த குழந்தையை வைத்துக்கொண்டு கேஎல்.ராகுல் ஆஸ்திரேலியாவில் விளையாடிய விதத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் அற்புதமாக விளையாடினார். எனவே அவரை துவக்க இடத்திலிருந்து மாற்ற வேண்டிய அவசியமில்லை. எதிர்காலத்தில் இது மாறலாம் ஆனால் தற்போது வெளிநாட்டு சூழ்நிலையில் அவர் சரியாக இருக்கிறார்”

இதையும் படிங்க : 28 பந்து அதிரடி சதம்.. அபிஷேக் ஷர்மா இரண்டு புதிய மெகா சாதனை.. ரோகித் ரிஷப் பண்ட் ரெக்கார்டு உடைந்தது.. 2024 SMAT

“இந்த முடிவு கடினமான ஒன்றுதான் ஆனாலும் அணிக்காக சூழ்நிலையை பொறுத்து எடுக்க வேண்டியதாக இருக்கிறது. எதிர்காலத்தில் இப்படி இருக்காது. நான் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வேன்” என்று கூறி இருக்கிறார். இதன் மூலம் இந்திய அணியின் பேட்டிங் வரிசை எப்படி அமையப் போகிறது என்பது தெளிவாகிவிட்டது. ரோகித் சர்மா விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு அடுத்து ஆறாவது இடத்தில் வருவார் என்று தெரிகிறது. மேலும் 2172 நாட்கள் கழித்து ரோகித் சர்மா துவக்க வீரர் இடத்தில் இருந்து கீழே இறங்கி இருக்கிறார்.

- Advertisement -