அஸ்வின் ஜடேஜா விஷயத்தில் நடந்தது இதுதான்.. துரதிஷ்டவசமாக நான் ஸ்பாட்ல இல்ல – ரோகித் சர்மா விளக்கம்

0
413
Rohit

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வினை விளையாடும் அணியில் சேர்க்காதது குறித்து தற்போது கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்து இருக்கிறார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக ஓவல் மைதானத்தில் துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா சம்பிரதாய பத்திரிகையாளர்கள் சந்திப்பை எதிர்கொண்டார்.

- Advertisement -

பும்ரா – கம்பீர் எடுத்த அதிரடி முடிவு

முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடவில்லை. இந்த நிலையில் தற்காலிக கேப்டன் பும்ரா மற்றும் அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் இருவரும் சேர்ந்து இரண்டு லெஜன்ட் சுழல் பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜாவை வெளியில் வைத்து இளம் வீரரான வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கொடுத்தார்கள்.

இந்த இருவரும் எடுத்த அதிரடி முடிவு முதல் டெஸ்ட் வெற்றியின் காரணமாக பெரிய விமர்சனங்களை எதிர்கொள்ளவில்லை. தற்போது கேப்டன் ரோகித் சர்மா திரும்ப வந்துவிட்டதால் அவர் மீண்டும் அனுபவ சுழல் பந்துவீச்சாளர்களுக்கு திரும்புவாரா? என்கின்ற எதிர்பார்ப்பும்ஏற்பட்டு இருக்கிறது.

- Advertisement -

உண்மை நிலவரம் என்ன?

இது குறித்து கேப்டன் ரோகித் சர்மா பேசும்பொழுது “துரதிஷ்டவசமாக அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் முதல் டெஸ்டில் விளையாட முடியாததை அவர்களிடம் சொல்வதற்கு நான் அணியில் இல்லை. இவ்வளவு அனுபவம் மிக்க வீரர்களை விட்டு செல்வது என்பது மிக மிக கடினமானது. குறிப்பிட்ட நேரத்தில் சூழ்நிலைக்கு தகுந்தபடி எடுக்கப்பட்ட முடிவின் காரணமாக அவர்கள் விடுபட்டு இருக்கிறார்கள். இந்த தொடர் முழுவதும் இப்படியே சூழ்நிலைக்கு தகுந்த முடிவுகளை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க : முதல் ODI.. 91 ரன் 10 விக்கெட்.. பரிதாபமாக சுருண்ட இந்திய பெண்கள் அணி.. ஆஸி அபார வெற்றி

“எஞ்சி இருக்கும் தொடரில் அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் பெரிய பங்களிப்பை நான் பார்க்க இருப்பதாக நினைக்கிறேன். இவர்கள் இரண்டு பேரும் சில மைதானங்களில் விளையாடுவதற்கு சரியானவர்களாக பிளேயிங் லெவனை மாற்றக் கூடியவர்களாக இருப்பார்கள். அந்தந்த நேரத்தில் அணிக்கு எது சிறப்பானதோ நாங்கள் அதை முயற்சி செய்வோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -