ஒரு மேட்ச் என்னை தடை பண்ணிட்டாங்க.. இல்லனா கதை வேற மாதிரி இருந்திருக்கும் – ரிஷப் பண்ட் பேட்டி

0
249
Rishabh

இன்று டெல்லியில் நடைபெற்ற டெல்லி மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் செயல்பாடு பற்றியும், நடந்து முடிந்த போட்டி பற்றியும் கூறியிருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் இழந்த டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த முறை டேவிட் வர்னாரை சேர்க்காமல் அபிஷேக் போரலை துவக்க ஆட்டக்காரராக அனுப்ப, அவர் அதிரடியாக 33 பந்தில் 58 ரன்கள் எடுத்தார். அடுத்து ஸ்டெப்ஸ் அதிரடியாக விளையாடி 25 பந்தில் ஆட்டம் இழக்காமல் 57 ரன் எடுத்தார்.

- Advertisement -

டெல்லி அணிக்கு நடுவில் ஷாய் ஹோப் 27 பந்தில் 38 ரன்கள், கேப்டன் ரிஷப் பண்ட் 23 பந்தில் 33 ரன்கள் எடுத்தார்கள். இதனால் டெல்லி அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டை இழந்து 208 ரன்கள் எடுத்தது. லக்னோ அணி இந்த போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்க முடியும் என்கின்ற நிலைமையில் களம் இறங்கியது.

ஆனால் வழக்கம்போல் லக்னோ அணி பவர் பிளேவில் நான்கு விக்கெட்டுகளை இழந்தது. சூழ்நிலையைப் புரிந்து அதிரடியாக விளையாடிய பூரன் 27 பந்தில் 61 ரன், இறுதியில் அர்ஷத் கான் 33 பந்தில் 58 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 20 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்து 19 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறிவிட்டது. மேலும் டெல்லி அணியும் ஏறக்குறைய வெளியேறிவிட்டது.

வெற்றிக்குப்பின் பேசிய டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் “நிச்சயமாக எங்களுக்கு பூரன் ஒரு கடினமான சூழ்நிலையை உருவாக்கினார். எங்களிடம் சில திட்டங்கள் இருந்தது, நாங்கள் எடுத்த ஸ்கோர் போதுமானதாகவும் இருந்தது. நாங்கள் தொடர்ந்து நல்ல பந்துகளை வீசினோம். இந்த சீசனின் ஆரம்பத்தில் எங்களுக்கு நல்ல நம்பிக்கை இருந்தது. சில காயங்கள் வந்த போதும் கூட, நாங்கள் கடைசி வரை போட்டி போட்டு தொடரில் இருந்தோம்.

- Advertisement -

இதையும் படிங்க : நாங்க மோசமான நிலைமையில இருக்கிறதுக்கு.. இந்த ஒரே விஷயம் தான் காரணம் – கேஎல் ராகுல் பேட்டி

எனக்கு கடைசி போட்டிகள் தடை விதிக்காமல் இருந்திருந்தால், நாங்கள் ப்ளே ஆப் வாய்ப்பு பெறுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு இருந்தது. தனிப்பட்ட முறையில் திரும்பி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவின் ஆதரவை பார்க்கும் பொழுது மேலும் மகிழ்ச்சி இருக்கிறது. ஒன்றரை வருடங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. நான் களத்தில் இருக்க விரும்புகிறேன், எதையும் தவறவிட விரும்பவில்லை” என்று கூறியிருக்கிறார்.