நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று டெல்லி மற்றும் லக்னோ அணிகள் மோதிக்கொண்ட போட்டி டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வென்றது. இந்த போட்டியில் தோல்விக்கான காரணம் குறித்து லக்னோ அணியின் கேப்டன் கேஎல்.ராகுல் பேசியிருக்கிறார்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணிக்கு பேட்டிங்கில் அபிஷேக் போரல் 33 பந்தில் 58 ரன்கள், ஸ்டப்ஸ் 25 பந்தில் 57* ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்களில் டெல்லி அணி நான்கு விக்கெட்டை மட்டும் இழந்து 28 ரன்கள் குவித்தது. லக்னோ அணியில் நவீன் உல் ஹக் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணிக்கு முதல் நான்கு விக்கெட்டுகள் 44 ரன்களுக்கு பவர் பிளேவில் விழுந்தது. இந்த நிலையில் அதிரடி காட்டிய நிக்கோலஸ் பூரன் 27 பந்தில் 61 ரன்கள் எடுத்தார். கடைசியில் பவுலர் அர்ஷத் கான் அதிரடியாக விளையாடி 33 பந்தில் 58 ரன்கள் எடுக்க, போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
இறுதியில் லக்னோ அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 189 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இந்தப் போட்டியின் முடிவின் மூலம் இரண்டு அணிகளுமே பிளே ஆப் வாய்ப்பில் இருந்து வெளியேறி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தோல்விக்குப்பின் பேசிய லக்னோ கேப்டன் கேஎல்.ராகுல் கூறும் பொழுது “இந்த போட்டியில் 40 ஓவர்களிலும் ஆடுகளம் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது என்று நினைக்கிறேன். நாங்கள் முதல் ஓவரிலேயே ஜாக் பிரேசரை வெளியேற்றினோம். ஆனால் அதை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அபிஷேக் மற்றும் ஹோப் இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். பின் இறுதியில் நாங்கள் நன்றாகவே செயல்பட்டோம். 200 ரன்கள் என்பது துரத்தக்கூடியதாகவே இருந்தது.
இதையும் படிங்க : டெல்லி லக்னோ போட்டி.. 2 அணிகளும் பிளே ஆஃபில் வெளியேறிய சோகம்.. சிஎஸ்கே ஆர்சிபி போட்டியின் சுவாரசியம்
நாங்கள் இந்த ரன்களை எடுத்து வெற்றி பெற்று இருக்க வேண்டும. பவர் பிளேவில் நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருக்கிறோம். இதன் காரணமாக எங்களால் பூரன் மற்றும் ஸ்டோய்னிஸ் இடம் இருந்து சிறந்ததை பெற முடியவில்லை. தற்போது நாங்கள் இந்த நிலையில் இருப்பதற்கு இதுதான் முக்கிய காரணம்” என்று கூறியிருக்கிறார்.