புள்ளி விவரங்களால் நிருபருக்கு கேப்டன் கே.எல்.ராகுல் பதிலடி!

0
472
Klrahul

பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் போட்டி தொடரை இழந்துள்ள நிலையில் நாளை மறுதினம் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடர் துவங்க இருக்கிறது . இந்தப் போட்டிக்காக இரண்டு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் .

இந்திய அணியை பொருத்தமட்டில் விராட் கோலி ஃபார்முக்கு திரும்பி இருப்பது மிகப்பெரிய பலமாக பார்க்கப்பட்டாலும் பந்துவீச்சில் முகமது சமி மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் இல்லாதது சிறிய பின்னடைவை ஏற்படுத்துகிறது. ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் அணியில் இடம்பெறாததால் சுழற் பந்துவீச்சு இந்திய அணியின் அனுபவ ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வினை சார்ந்துள்ளது.

கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக அணியில் இருந்து விலகி உள்ள நிலையில் துணை கேப்டன் கேஎல் ராகுல் இந்தப் போட்டிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் இந்நிலையில் போட்டிக்கு முன்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கேஎல்.ராகுலிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் விராட் கோலியின் டெஸ்ட் போட்டிகள் பார்ம் பற்றி கேட்டார் .

அதற்கு பதில் அளித்த கேஎல. ராகுல் “விராட் கோலி இந்திய அணியின் அனுபவமிக்க பேட்ஸ்மேன் அவர் ஒரு நாள் போட்டிகளில் பார்முக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சியான விஷயம் மேலும் அவர் ஒரு கிளாஸ் பிளேயர் எப்போது வேண்டுமானாலும் ஃபார்முக்கு வரக்கூடிய தகுதி அவருக்கு இருக்கிறது” என்று கூறினார் .

மேலும் இது குறித்து பேசி அவர் “இந்த வருடங்களில் இந்திய அணி குறைவான டெஸ்ட் போட்டிகளிலேயே ஆடி உள்ளது என்றும் அவற்றில் விராட் கோலி தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக அளித்ததாக புள்ளி விவரங்கள் இருக்கின்றன” என்று கூறி முடித்தார் .