இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னராக திடீரென அணியிலிருந்து வெளியேறிய கேப்டன் கேன் வில்லியம்சன் – காரணம் இதுதான்

0
62

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை தோற்கடித்து தற்பொழுது தொடரில் முன்னணியில் உள்ளது.

இன்று முதல் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. நோட்டிங்கமில் இன்று 3:30 அளவில் 2வது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 2வது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கும் நேரத்தில் கேன் வில்லியம்சன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து வெளியேறி உள்ளார்.

- Advertisement -

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து வெளியேறியுள்ள கேன் வில்லியம்சன்

கொரோனோ பரிசோதனையில் கேன் வில்லியம்சனுக்கு முடிவு பாசிட்டிவாக வந்துள்ளது. மற்ற வீரர்கள் அனைவருக்கும் நெகட்டிவாக வந்த நிலையில், இவருக்கு மட்டும் முடிவு பாசிட்டிவாக வர தற்போது அவர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்.தற்பொழுது நியூசிலாந்து அணியை டாம் லதாம் வழிநடத்த தயாராகிக் கொண்டிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் கேன் வில்லியம்சன் எவ்வளவு ஏமாற்றம் அடைவார் என்பதை நாங்கள் உணர்கிறோம். நாங்கள் அனைவரும் அவருக்காக வருந்துகிறோம் என்று நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டேட் வருத்தம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஐசிசி சேர்மன் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்த கேன் வில்லியம்சன்

ஐசிசி சேர்மன் கிரெக் பார்கிளே ஒரு கருத்து தெரிவித்திருந்தார். இனி வரவிருக்கும் ஆண்டுகளில் இந்த டெஸ்ட் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு ஆளாகும் என்று தன் கருத்தை தெரிவித்திருந்தார்.

அந்த கருத்துக்கு நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் எதிர் கருத்துக்களை தெரிவித்தார்.”நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்புகிறோம். டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்புள்ள அனைத்து நாடுகளும் இதே தான் விரும்புகிறது.

கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில் இந்த வடிவம் உச்சம். நாங்கள் இதை இன்னும் பல ஆண்டுகள் பார்க்க விரும்புகிறோம். பிற வடிவங்கள் சிறந்தவையாக இருந்தாலும் இந்த டெஸ்ட் கிரிக்கெட் எப்பொழுதும் வளர்ச்சியை நோக்கி தான் போக வேண்டும்.

எதிர்காலத்தில் வரவிருக்கும் தொடர்கள் குறித்து திட்டம் எடுக்கவும்,முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஒரு சிலர் இருக்கின்றனர். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நாடுகள் மீது எப்பொழுதும் ஒரு காதல் இருக்கிறது” என்று கேன் வில்லியம்சன் கூறி முடித்தார்.