தேவையில்லாமல் முகமது ரிஸ்வானின் கை கிளவுஸ்சை அணிந்து, பெனால்டியை பரிசாக வாங்கிக் கொண்ட கேப்டன் பாபர் அசாம் – வீடியோ இணைப்பு

0
462

பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில் நேற்று 2-வது போட்டி நடைபெற்றது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பாபர் அசாம் 77 ரன்கள் குவித்தார். மேற்கிந்திய தீவுகள் அணியில் அகீல் ஹுசைன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

பின்னர் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 155 ரன்களுக்கு ஆட்டமிழந்தது அபார தோல்வி அடைந்தது. மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் அதிகபட்சமாக ஷாமர் ப்ரூக்ஸ் 42 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக முகமது நவாஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

பாபர் அசாம் செய்த வேலையால் 5 ரன்கள் பெனால்டி

நேற்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் கொண்டிருந்த சமயத்தில் இந்த நிகழ்வு அரங்கேறியது. இருபத்தி எட்டாவது ஓவரை முகமது நவாஸ் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை அல்சாரி ஜோசப் எதிர்கொண்டார்.

- Advertisement -

அந்த பந்தை அவர் அடித்து ஒரு ரன் ஓடினார். தற்போது விஷயம் என்னவென்றால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், விக்கெட் கீப்பர் முஹம்மது ரிஸ்வானின் கை கிளவுஸ்சை அணிந்து கொண்டு அவர் அடித்த அந்த பந்தை பிடித்தார்.

ஐசிசி விதிமுறையின்படி விக்கெட் கீப்பரை தவிர்த்து அணியில் இருக்கும் மற்ற வீரர்கள் விக்கெட் கீப்பரின் கை கிளவுஸ் மற்றும் லெக் பேட் ஆகியவற்றை அணியக்கூடாது. ஆனால் நேற்று பாபர் அசாம் அவ்வாறு அணிந்தது தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டது. அவர் செய்த அந்த தவறுக்கு 5 ரன்கள் பெனால்டியாக மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாபர் அசாம் முஹம்மது ரிஸ்வானின் கை கிளவுஸ்சை அணிந்து கொண்டு பந்தை பிடித்து வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று நடந்துமுடிந்த போட்டியில் 120 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் முன்னணியில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.