பும்ராவை நம்ப முடியாது.. முகமது ஷமியை அணியில் எடுத்திருக்க வேண்டும் – தமிழக வீரர் அதிரடி விமர்சனம்!

0
313
Shami

நடப்பு 16வது ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி தற்பொழுது இலங்கை கண்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மழை அச்சுறுத்தல் பற்றி கவலைப்படாமல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

- Advertisement -

இன்று பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் 11 பேர் கொண்ட இந்திய அணியில் காயத்தில் இருந்து திரும்பி வந்த ஸ்ரேயா ஐயர் மற்றும் ஜஸ்ட்ப்ரித் பும்ரா இருவரும் இடம் பெற்று இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்திய அணியில் பும்ரா, சமி, சிராஜ் மூவரும் இடம் பெற வேண்டும் என்று பல முன்னாள் வீரர்களும் கருத்து கூறி வந்தார்கள். பலரும் இவர்கள் மூவரும் விளையாடு அணியில் இடம் பெறுவார்கள் என்று நினைத்தார்கள்.

ஆனால் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் வேறு மாதிியாக சிந்தித்து இருக்கிறது. இந்த அணியில் வேகப்பந்துவீச்சாளர் சமிக்கு இடம் தரப்படவில்லை. அவருடைய இடத்தில் ஆல்ரவுண்டர் சர்துல் தாக்கூர் விளையாடுகிறார்.

- Advertisement -

இதுகுறித்து பலரும் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வருகிறார்கள். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சின் பலத்தை இது குறைத்து விடும், பாகிஸ்தான் வீரர்களின் விக்கட்டை கைப்பற்றுவதில் கடினத்தை உண்டாக்கும் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் இது குறித்து கூறும் பொழுது “காயத்தில் இருந்து மீண்டும் வரும் பும்ரா சரியான உடல் தகுதியில் இருப்பாரா என்று தெரியாது. எனவே அவருக்கு பக்கபலமாக சமி அணியில் இருந்திருப்பதுதான் சரியாக இருக்கும். சமி இல்லாதது தவறான ஒன்றாக இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!

தற்பொழுது இந்திய அணி ஷாகின் சா அப்ரிடியிடம் ரோகித் சர்மா விக்கட்டை இழந்து விளையாடி வருகிறது. மழை அச்சுறுத்தல் இருப்பது இந்திய அணிக்கு தற்பொழுது பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது!