ரோகித் டிராவிட் இதை செய்யறத என்னால ஏத்துக்கவே முடியல – பாகிஸ்தான் ரமீஷ் ராஜா வெளிப்படையான குற்றச்சாட்டு!

0
299
Rohit

2021 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றோடு தோற்று வெளியே வந்தது. இதற்கு அடுத்த சில மாதங்களில் விராட் கோலி 3 வடிவ இந்திய கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்தும் வெளியேறினார்!

இதற்கு அடுத்து புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மாவுக்கும், புதிய தலைமை பயிற்சியாளராக வந்த இந்திய லெஜெண்ட் ராகுல் டிராவிட்டுக்கும், இந்திய அணியை மீள் உருவாக்கம் செய்கின்ற பெரிய பொறுப்பு இருந்தது.

- Advertisement -

இதன் காரணமாக இந்த ஜோடி புதிய வீரர்களை அணிக்குள் கொண்டு வர ஆரம்பித்தது. இவர்கள் பொறுப்பேற்ற சமயத்தில் டி20 உலக கோப்பை இருந்த காரணத்தினால், அதை நோக்கி இவர்கள் அணியை தயாரித்து கொண்டு இருந்தார்கள்.

இந்த நேரத்தில் கடந்த ஆண்டு ஆசியக் கோப்பையின் போது ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா இருவரும் காயம் அடைந்தார்கள். இது அணியை உருவாக்குவதில் பெரிய தடுமாற்றத்தை கொடுத்தது. ஆனாலும் கூட அர்ஸ்தீப் மற்றும் அக்சர் படேல் இருவரையும் வைத்து ஈடு கட்டினார்கள்.

தற்பொழுது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு இவர்கள் ஒரு அணியை உருவாக்கி வைத்திருக்க, அதில் ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ரிஷப் பண்ட், ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா என முக்கிய ஐந்து வீரர்கள் காயத்தில் சிக்கினார்கள்.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணி இப்பொழுது வரை முழுவதும் செட்டில் செய்யப்பட்ட ஒரு அணியாகக் கிடைக்கவில்லை. இதன் காரணமாக ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட் மீது இந்தியாவிலேயே பெரிய விமர்சனங்கள் இருந்து வருகிறது. தற்பொழுது இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் ரமீஷ் ராஜாவும் தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“இந்திய அணி தற்பொழுது கொஞ்சம் பின்தங்கி இருக்கலாம். உலகக் கோப்பை ஆண்டில் கூட அவர்கள் இன்னும் சரியான காம்பினேஷன்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் காம்பினேஷன்களை கண்டறிவதில் இன்னும் வெற்றியடையவில்லை.

அவர்கள் வெற்றியடைந்த காம்பினேஷன்களை கூட பிரித்து பரிசோதனை முயற்சி செய்கிறார்கள். இதை பார்ப்பதற்கு எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. இதனால் கவனம் தேவை இல்லாமல் வேறு எங்கோ நோக்கி செல்கிறது.

பாகிஸ்தான் பிளேயிங் லெவன் பற்றி நீங்கள் யாரிடமாவது கேட்டால், அவர்கள் அது குறித்து யோசிக்காமல் உடனே சொல்வார்கள். ஆனால் இந்தியாவின் பிளேயிங் லெவன் பற்றி யாரிடமாவது கேட்டால் இன்னும் அதில் குழப்பம் இருக்கிறது. இது பாகிஸ்தானுக்கு பலன் தரக்கூடிய ஒன்று!” என்று கூறியிருக்கிறார்!