இந்தியாவுக்கு போய் இந்தியாவை அடிக்க முடியுமா? இது கோலி காலம்..! – முகமது அமீர் மாஸ் ஸ்பீச்!

0
1484
Amir

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இருநாட்டு கிரிக்கெட் தொடர் நடைபெற்று 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகின்றன.

இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் அணி ஆறு ஆண்டுகள் கழித்து தற்பொழுது இந்தியாவிற்கு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் விளையாடுவதற்காக வந்திருக்கிறது.

- Advertisement -

இந்தியாவில் இரண்டு அணிகளும் ஓதிக்கொள்ள இருக்கின்ற காரணத்தினால் நடக்க இருக்கின்ற உலக கோப்பையில் மிகப்பெரிய சந்தை மதிப்பையும் எதிர்பார்ப்பையும் கொண்ட போட்டியாக இந்தியா பாகிஸ்தான அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி மாறி இருக்கிறது.

ஐசிசி தொடரில் இந்திய அணியை வீழ்த்தி 2017 ஆம் ஆண்டு சாம்பியன் டிராபியை பாகிஸ்தான் வென்றது. அப்போது ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் மூவரது விக்கெட்டையும் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஆமீர் கைப்பற்றி வெற்றிக்கு வித்திட்டார்.

உலகக் கோப்பை குறித்து தற்போது பேசி உள்ள முகமது ஆமீர் “சாம்பியன் டிராபி இறுதிப் போட்டி என் இதயத்திற்கு எப்பொழுதும் நெருக்கமானது. அது ஒரு அற்புதமான ஆட்டம். ஒருதலைப்பட்சமான ஆட்டம். பாகிஸ்தான் அந்த போட்டியில் எளிதாக வென்றது. விராட்டை வெளியேற்றியது எனக்கு பெரிய தருணம்.

- Advertisement -

விராட் கோலி விக்கெட்டை அசார் அலி தவறவிட்டார். அடுத்த உடனே விராட் கோலியை வெளியேற்ற வேண்டும் என்று நான் நினைத்தேன். அதைச் செய்தேன். ஒரு கிரிக்கெட் வீரராக நான் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகன். இந்த தசாபத்தின் மிகச்சிறந்த விராட் கோலிதான். அவரை ஆட்டம் இழக்க செய்தது எனக்கு சிறந்த தருணம்.

இந்தியாவில் விளையாடுவதால் இந்தியா ஹாட் ஃபேவரைட். இந்தியாவுக்கு எதிராக எந்த அணி விளையாடினாலும் 110 சதவீதம் கொடுக்க வேண்டும். இந்தியா அவர்களின் சொந்த சூழ்நிலையில் ஆபத்தான அணியாகும். இந்தியாவில் வெல்வது எளிதான வேலை கிடையாது.

ஆஸ்திரேலியா செல்லும் பொழுது ஒவ்வொரு அணியும் போராடுகிறது. அதேபோல் இந்தியா செல்லும் பொழுது ஒவ்வொரு அணியும் வெற்றிக்கு போராடும். ரோகித் சர்மாவின் இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ள அணியாக இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!