கேஎல் ராகுலை நீக்கி விடலாமா? – பத்திரிக்கையாளரை அதிரவைத்த சூர்யகுமார் யாதவ்!

0
892
Surya kumar yadav

தற்போது யுனைடெட் அரபு எமிரேட்டில் நடந்து வரும் 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று ஹாங்காங் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று, தனது குழுவில் முதல் அணியாக இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தது இருக்கிறது!

இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹாங்காங் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்ய கேப்டன் ரோகித் சர்மாவும் பேட் செய்ய வந்தார்கள். குடலிறக்க அறுவை சிகிச்சைக்கு பின் வந்த கேஎல் ராகுல் பேட்டிங் இன்றைய ஆட்டத்திலும் மிக சுமாராகவே இருந்தது. இதனால் கேப்டன் ரோகித் சர்மா அடிக்கப் போய் ஆட்டமிழந்தார். கேஎல் ராகுல் முப்பத்தி ஒன்பது பந்துகளை சந்தித்து வெறும் 36 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் இந்திய அணியில் ஒரு மாற்றமாக இந்திய அணியில் வெற்றிகரமான வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விற்கு ஓய்வு அளிக்கப்பட்டு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்னொரு முனையில் கேஎல் ராகுல் மிக மந்தமாக விளையாடி ஆட்டமிழந்தார்.

இதே ஆட்டத்தில் கேஎல் ராகுல் ஆட்டம் இழந்ததும் களம் புகுந்த சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 68 ரன்களை நொறுக்கி விராட் கோலியுடன் சேர்ந்து 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியின் ஸ்கோரை யாரும் எதிர்பார்க்காத விதத்தில் 192 என்று உயர்த்தினார். இதில் அவர் பிரம்மாண்டமான 6 சிக்சர்கள் விளாசி இருந்தார்.

தற்போது பேட்டிங்கில் பார்ம் இல்லாமல் மிக மந்தமாக செயல்பட்டு வரும் கேஎல் ராகுல் அணியில் தேவையா? அவருக்கு பதில் ரிஷப் பண்ட் ஆட்டத்தை துவங்கலாமா? இல்லை சூர்யகுமார் யாதவ் ஆட்டத்தை துவங்கலாமா? பேச்சுகள் ஆசிய கோப்பையில் இரண்டு போட்டிகள் முடிந்ததும் ஆரம்பித்துவிட்டது. ஏற்கனவே சூர்யகுமார் யாதவ் வெஸ்ட்இண்டீஸ் உடனான டி20 தொடரில் துவக்க பேட்ஸ்மேனாக களமிறங்கி மிகச்சிறப்பாக அதிரடியாக விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நேற்று போட்டிக்கு பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிக்கையாளர் ஒருவர் சூரியகுமார் யாதவிடம், நீங்கள் மீண்டும் பேட்டிங்கில் ஓப்பனிங்கில் வருவீர்களா என்று கேட்டார். பதில் அளித்த சூரியகுமார் எடுத்தவுடன் ” அப்பொழுது கே எல் ராகுலை நீக்க சொல்கிறீர்களா? ” என்று திருப்பி அவரையே கேட்டு அதிர்ச்சி அடைய வைத்தார்.

பின்பு கேஎல் ராகுல் குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ் அதில் ” அவர் காயத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறார். அவருக்கு கொஞ்சம் கால அவகாசம் தேவை. எங்களுக்கு இப்போது கொஞ்சம் நேரம் இருக்கிறது. என்னைப் பொருத்தவரை நான் எந்த இடத்திலும் பேட்டிங் செய்ய நெகிழ்வாகவே இருக்கிறேன். அணியின் கேப்டனும் பயிற்சியாளரும் என்னை எந்த இடத்தில் விளையாட சொன்னாலும் நான் அந்த இடத்தில் போய் விளையாடுவேன்” என்று தெரிவித்தார்!