முகமது ஷமியை டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் சேர்க்க முடியுமா? என்ன சொல்கிறது ஐசிசி விதி?

0
5028
Shami

டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் 16ம் தேதி துவங்கி நவம்பர் மாதம் 13-ஆம் தேதி முடிகிறது. இந்த உலகக் கோப்பை தொடருக்கு 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 4 அணிகள் தகுதி சுற்றில் மூலமாக தகுதி பெற இருக்கிறது. மொத்தம் 16 அணிகள் தகுதி சுற்று ரோடு சேர்த்து இந்த உலகக் கோப்பையில் பங்கு பெறுகிறது.

தகுதி சுற்று போட்டிகள் அக்டோபர் 16ஆம் தேதி துவங்குகிறது. இதில் பங்குபெறும் 8 அணிகளையும் இரு குழுவாக பிரித்து உள்ளார்கள். குழு ஏ பிரிவில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய அணிகளும், குழு பி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

- Advertisement -

முக்கிய முதல் சுற்று போட்டிகள் அக்டோபர் 22-ஆம் தேதி ஆரம்பிக்கிறது. இதன் முதல் போட்டியில் கடந்த டி20 உலக கோப்பையில் இறுதிப் போட்டியில் மோதிய ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதற்கு அடுத்த நாள் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டி நவம்பர் 13ஆம் தேதி நடக்கிறது!

தற்போது இந்த உலகக் கோப்பையில் பங்கு வெறும் 16 அணிகளும் தங்கள் 15 பேர் கொண்ட அணியை அறிவித்து விட்டன. ஏறக்குறைய எல்லா அணிகளுமே இந்த உலகக் கோப்பை போட்டிக்கு தயாராக இருக்கின்றன.

இந்திய அணியும் தனது 15 பேர் கொண்ட டி20 உலகக்கோப்பை அணியை அறிவித்துள்ளது. இந்த அணியில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி க்கு இடம் அளிக்கப்படவில்லை. அவர் ரிசர்வு வீரராக தொடர்கிறார். அதேசமயத்தில் ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பதால் அவரை அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வெளியிலிருந்து அழுத்தமாக எழுகிறது. இப்படி எழுந்த காரணத்தால்தான் அவர் ரிசர்வ் வீரராகவே தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தற்போது முகமது சமியை 15 பேர் கொண்ட உலக கோப்பை இந்திய அணியில் சேர்க்க ஐசிசி விதி அனுமதிக்குமா என்றால், அனுமதிக்கவே செய்கிறது. அதாவது உலகக் கோப்பைக்கு அணியை அறிவித்துள்ள எல்லா அணிகளும், வருகின்ற அக்டோபர் 9 ஆம் தேதிக்குள் தங்கள் அணியில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால் செய்து கொள்ளலாம். ஆனால் அதற்குப் பிறகு ஒரு வீரர் காயம் அடைந்து அவர் உண்மையாகவே காயமடைந்து இருக்கிறாரா என்பது பரிசோதிக்கப்பட்ட பின்பே அவர் நீக்கப்பட்டு மற்றொருவரை சேர்க்க முடியும். எனவே முகமது சமியை மீண்டும் இந்திய அணியில் சேர்க்க அக்டோபர் 9ஆம் தேதி வரை நேரம் இருக்கிறது. தற்போது நடக்க இருக்கும் தென்ஆப்பிரிக்க தொடரில் அவரின் செயல்பாட்டை வைத்து இந்தியா நிர்வாகம் முடிவு செய்ய அதிக வாய்ப்பு இருக்கிறது!

ஆஸ்திரேலிய தொடரில் இடம் பெற்ற முகமது சமி கோவிட் தொற்றால் தொடரில் இருந்து விலகினார். தற்போது அவர் குணம் அடைந்து விட்டதாகவும், அவர் அடுத்து நடக்க இருக்கும் சவுத்ஆப்பிரிக்கா அணியுடனான டி20 தொடரில் விளையாடுவார் என்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிப்பது இந்திய அணிக்கு நல்ல விஷயம்!