“மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்த சோதனை” 17.5 கோடி வீரருக்கு மாற்று வீரர் வருகிறாரா? – ரிப்போர்ட்

0
6069

கேமரூன் கிரீன் ஐபிஎல் போட்டிகளில் ஆடுவது சந்தேகம் என தெரியவந்துள்ளது. மாற்று வீரரை மும்பை இந்தியன்ஸ் அணி தேடுவதற்கும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதி கொச்சியில் நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் அதிகபட்சமாக ஷாம் கர்ரன் 18.5 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எடுக்கப்பட்டார். அதற்கு அடுத்த அதிகபட்சமாகவும் மும்பை இந்தியன்ஸ் அணி வரலாற்றில் விலை உயர்ந்த வீரராகவும் ஏலத்தில் எடுக்கப்பட்டவர் கேமரூன் கிரீன். இவரை 17.5 கோடி ரூபாய் கொடுத்து போட்டி எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் இடம் பெற்று மிகச் சிறப்பாகவும் பந்துவீசி வந்தார். இரண்டாவது டெஸ்டில் முதல் ஐந்து விக்கெட் ஹால் பதிவு செய்தார். பேட்டிங்கில் 51 ரன்கள் அடித்தார்.

துரதிஷ்டவசமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து கொண்டு இருந்தபோது விரலில் பந்து பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. இருப்பினும் தனது பேட்டிங்கை மீண்டும் தொடர்ந்து விளையாடி அரைசதம் அடித்தார்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக அவரால் விளையாட முடியாது என மருத்துவ குழுவினர் அறிவித்து விட்டனர். மேலும் அடுத்த நான்கு மாதங்களுக்கு எந்தவித கிரிக்கெட்டும் அவர் விளையாட கூடாது என்ற அறிவுரையும் கூறப்பட்டிருக்கிறது. முழுமையாக குணமடைய மே மாதம் ஆகலாம் என தெரிகிறது.

- Advertisement -

ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் ஐபிஎல் தொடர் துவங்க உள்ளதாக தகவல்கள் வருகிறது. ஐபிஎல் போட்டிகளுக்குள் இவர் குணமடைவது கடினம் என தெரிகிறது. 17.5 கோடி ரூபாய் கொடுத்து எடுத்தும் இவரை விளையாட வைக்க முடியாமல் போக வாய்ப்புள்ளதால், முன்னேற்பாடாக மாற்று வீரரை மும்பை இந்தியன்ஸ் அணி தேடி வருவதாகவும் சில தகவல்கள் வருகின்றன.