மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நேர்ந்த சோகம்… 17.5 கோடிக்கு எடுக்கப்பட்ட பிளேயர் விளையாடுவது டவுட்டா?

0
617

இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது, கையில் பந்து பட்டு படுகாயம் ஏற்பட்டதால் உடனடியாக போட்டியை விட்டு பாதியிலேயே வெளியேறி உள்ளார் கேமரூன் கிரீன்.

தென்னாப்பிரிக்கா அணியுடன் இரண்டாவது டெஸ்டில் விளையாடி வருகிறது ஆஸ்திரேலிய அணி. இந்த டெஸ்ட் போட்டி மெல்போன் மைதானத்தில் நடைபெறுகிறது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா அணியை 189 ரன்களுக்கு ஆல்அவுட் செய்த பிறகு, முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்வது வரும் ஆஸ்திரேலியா அணிக்கு கவாஜா(1) மற்றும் லபுச்சானே (14) இருவரும் விரைவாக ஆட்டமிழந்து விட்டனர்.

பின்னர் வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 239 ரன்கள் சேர்த்தனர். செஞ்சுரி அடிக்க முடியாமல் 85 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார் ஸ்மித்.

மறுமுனையில் சிறப்பாக விளையாடிய வார்னர் தனது 100வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து பல்வேறு சாதனைகளை படைத்தார். இரட்டை சதம் அடித்ததை கொண்டாடிய போது, வார்னர் காலில் தசைபிடிப்பு ஏற்பட்டது. உடனடியாக ரிட்டையர்டு ஹர்ட் கொடுத்து போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.

- Advertisement -

அடுத்ததாக உள்ளே வந்த கேமரூன் கிரீன் டிராவிஸ் ஹெட் உடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி வந்தார். ஆன்ரிக் நார்க்கியா எதிர்கொண்டபோது, கிரீன் விரலில் பந்துபட்டு படுகாயம் அடைந்து, இவரும் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் பெவிலியன் திரும்பினார். காயத்தின் தீவிரம் எப்படி இருக்கிறது என்று தற்போது வரை தெரியவில்லை.

நான்கு நாட்களுக்கு முன்பு நடந்த ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 17.5 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டார். தற்போது இப்படி காயம் அடைந்திருப்பதால், ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியுமா? முடியாதா? என்ற பல்வேறு சந்தேகங்களும் குழப்பங்களும் நிலவி வருகிறது.

இவரது காயம் குறித்த அறிக்கைகள் நாளை காலை வெளியிடப்படும் என்று அணியின் மருத்துவ குழுவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறுத்திருந்து காண்போம்.