வீடியோ ; மெல்போனுக்கு வாங்க – இந்தியாவுக்கு அக்தர் அழைப்பு!

0
2011
Akthar

ஆஸ்திரேலியா சிட்னி மைதானத்தில் இன்று நடந்த முதல் அரைஇறுதி போட்டியில், நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடிய பாகிஸ்தான் அணி ஏழு விக்கட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது!

இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியை பந்துவீச்சில் மிகச் சிறப்பாக பாகிஸ்தான் அணி கட்டுப்படுத்தியது. நியூசிலாந்து அணியால் விக்கெட்டுகளை பிற்பகுதியில் இழக்காமல் நின்றாலும் ரன்கள் கொண்டுவர முடியவில்லை.

20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணியால் 152 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் நான்கு ஓவர்கள் பந்துவீசி 24 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினார்!

இதற்கு அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணிக்கு பாபர் மற்றும் ரிஸ்வான் முதல் விக்கட்டுக்கு 105 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு சிறப்பான அடித்தளம் அமைத்தார்கள். இருவரும் அரை சதம் அடித்து ஆட்டம் இழக்க ஐந்து பந்துகள் மீதம் இருக்கையில் பாகிஸ்தான அணி எளிதாக வெற்றி பெற்றது.

நாளை இரண்டாவது அரை இறுதி போட்டியில் அடிலைடு மைதானத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெல்லும் பட்சத்தில் 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகக் கோப்பை தொடர் ஒன்றில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் பிரம்மாண்ட நிகழ்வு நடைபெற வாய்ப்பு இருக்கிறது!

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வேத பந்துவீச்சாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் ” அன்புள்ள இந்தியா! நாளை நடக்கும் போட்டிக்கு உங்களுக்கு நல்வாழ்த்துக்கள். மெல்போனில் உங்களுக்காக ஒரு நல்ல கிரிக்கெட் விளையாட காத்திருப்போம்!” என்று கூறியுள்ளார் இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!