டி20 உலககோப்பையிலிருந்து தினேஷ் கார்த்திக் விலகுகிறாரா? – புவி கொடுத்த ஷாக் அப்டேட்!

0
8811

தினேஷ் கார்த்திக் முதுகு பகுதி காயம் குறித்து மிகப்பெரிய அப்டேட் ஒன்றை கொடுத்து இருக்கிறார் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டிருந்த புவனேஷ் குமார்.

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளின் வெற்றிக்கு பிறகு மூன்றாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை பெர்த் மைதானத்தில் எதிர்கொண்டது.

- Advertisement -

போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 133 ரன்கள் மட்டுமே எடுத்து 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 68 ரன்கள் அடித்து அணிக்கு ஒற்றை நம்பிக்கையாக இருந்தார்.

இலக்கை துரத்திய தென்னாபிரிக்கா அணி முதலில் இந்திய அணியின் பந்துவீச்சில் திணறியது. முதல் 10 ஓவர்களில் 40 ரன்கள் மட்டுமே எடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதற்கு அடுத்ததாக மில்லர் மற்றும் மார்க்ரம் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் அடிக்க துவங்கினர்.

மார்க்ரம்(52) அவுட் ஆன பிறகு, மில்லர் (59) கடைசிவரை நின்று வெற்றியை உறுதி செய்தார். 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு தென் ஆப்பிரிக்கா அணி 135 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. புள்ளிபட்டியலிலும் முதலிடம் பிடித்தது.

- Advertisement -

தினேஷ் கார்த்திக் காயம்:

போட்டியின் 15வது ஓவருக்கு மேல், தினேஷ் கார்த்திக் கீப்பிங் செய்யும்போது முதுகுப்பகுதியில் திடீரென வலி ஏற்பட்டதால் அணியின் பிசியோவை வரச் சொல்லி சிகிச்சை எடுத்துக் கொண்டார். ஆனால் அதுவும் பலிக்கவில்லை என்பதால் பெவிலியன் திரும்பினார். இவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் வந்து கீப்பிங் செய்தார்.

அப்போதிருந்து, தினேஷ் கார்த்திக்-கிற்கு என்ன ஆயிற்று? என தொடர்ந்து கேள்விகளை மக்கள் எழுப்பி வருகின்றனர். அதற்கு சமீபத்திய பேட்டியில் புவனேஸ்வர் குமார் பதில் அளித்திருக்கிறார். அவர் கூறுகையில் “பெஞ்சில் இருந்த வீரரை தயாராக சொல்லி பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த அளவில் தான் எனக்கு தகவல் வந்தது. அடுத்த போட்டியில் அவர் இருக்கமாட்டார் என நினைக்கிறேன். பிசியோ ரிப்போர்ட் பொறுத்து உலககோப்பையையில் இருப்பாரா? மாட்டாரா? என்பது தெரியும்.” என்றார்.