விரலில் தையலோடு வந்து ருதுராஜ் ஆரன்ஞ் தொப்பியைப் பறித்த பட்லர் மாஸ் பேட்டி!

0
261
Butler

பதினாறாவது ஐபிஎல் சீசனில் பதினோறாவது போட்டி இன்று அசாம் மாநிலம் கவுகாதி மைதானத்தில் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது!

இந்தப் போட்டியில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் அபாரமான அதிரடியான துவக்கத்தை தந்தார்கள்.

- Advertisement -

மிகச் சிறப்பாக விளையாடிய இளம் வீரர் ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே ஐந்து பவுண்டரிகள் விரட்டியதோடு 31 பந்தில் 11 பவுண்டரிகள் உடன் 60 ரன்கள் குவித்து முதல் விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் ரன் இல்லாமல் வெளியேறினார். அடுத்து இளம் வீரான் பராக் 11 பந்தில் 7 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து ஹெட்மயர் வந்து பட்லர் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 49 ரன்கள்பார்ட்னர்ஷிப் அமைத்தது.

மிகச் சிறப்பாக விளையாடிய பட்லர் 51 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 79 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஹெட்மயர் 21 பந்தில் 1 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 39 ரன்கள் சேர்த்தார். பஞ்சாப் அணிவுடன் கலக்கிய இளம் வீரர் துருவ் ஜுரல் முதல் பந்தில் சிக்சர் அடித்து மூன்று பந்தில் எட்டு ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இந்தப் போட்டியில் 79 ரன்கள் எடுத்ததன் மூலம் ஜோஸ் பட்லர் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பியை சென்னை அணியின் ருதுராஜ் இடம் இருந்து பறித்திருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த முதல் ஐந்து வீரர்கள்.

ஜோஸ் பட்லர் 3 ஆட்டங்கள் 152 ரன்கள்
ருதுராஜ் 2 ஆட்டங்கள் 149 ரன்கள்
கையில் மேயர்ஸ் 3 ஆட்டங்கள் 139 ரன்கள்
ஷிகர் தவான் 2 ஆட்டங்கள் 126 ரன்கள்
ஜெய்ஸ்வால் 3 ஆட்டங்கள் 125 ரன்கள்

ஆரஞ்சு தொப்பியைப் பெற்ற ஜோஸ் பட்லர் பேசும்பொழுது ” கடைசி ஆட்டத்தில் என் விரலில் காயம் பட்டு அதற்கு தையல் போடப்பட்டுள்ளது. ஆனால் இதோடு விளையாட முடிவது நல்லது. ஆரஞ்சு தொப்பியை அணிவது சந்தோஷம்தான் அதே சமயத்தில் அணிக்கு நல்ல துவக்கத்தை கொடுத்தது மகிழ்ச்சி. இது பேட்டிங் செய்ய நல்ல விக்கெட் எனவே நாங்கள் திருப்பி நல்ல முறையில் பந்து வீசியாக வேண்டும். பவர் பிளே நன்றாக இருந்தது. ஆனால் பழைய பந்தில் பவுன்ஸ் இல்லை!” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய ஜோஸ் பட்லர்
“நாங்கள் நடு ஓவர்களில் சில விக்கெட்டுகளை இழந்ததால் வேகத்தை இழந்து விட்டோம். இதேபோல் எங்களுக்கு அஸ்வின் மற்றும் சாகல் செய்வார்கள் என்று நான் நம்புகிறேன். எல்லா மாதிரியான இடங்களிலும் பந்து வீசக்கூடிய பந்துவீச்சாளர்களை நாங்கள் எங்கள் அணியில் கொண்டிருக்கிறோம். எங்களிடம் பந்துவீச்சு விருப்பங்கள் உள்ளன. வெளிப்படையாக ட்ரண்ட் போல்ட் நன்றாக பந்து வீசுகிறார்!” என்று கூறியுள்ளார்!